Shanmugan Murugavel / 2016 ஜனவரி 08 , மு.ப. 05:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
வடகொரியாவின் ஐதரசன் குண்டைச் சோதித்ததான அறிவிப்புக்கு பதில் நடவடிக்கையாக, ஒலிபெருக்கிகள் வழியாக வடகொரியாயாவுக்கெதிரான பிரசார ஒலிபரப்பை தென்கொரியா மீள ஆரம்பித்துள்ளது. இந்த நடவடிக்கை, கடந்த காலங்களில் வடகொரியாவை ஆத்திரமூட்டியது என்பது குறிப்பிடத்தக்கது.
உள்ளூர் நேரப்படி இன்று பிற்பகல் வேளையிலும் ஜி.எம்.டி நேரப்படி 0300 மணிக்கும் ஒலிபெருக்கிகளுடான ஒலிபரப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இரண்டு நாட்டு எல்லையுடன் அமைந்த 11 இடங்களில் இருந்து ஒலிபெருக்கிகளிலிருந்து ஒலிபரப்பு மேற்கொள்ளப்படுவதாகவும், இதில் கொரிய பொப்பிசை, செய்தி, வானிலை அறிக்கை, வடகொரியாவுக்கு எதிரான பிரசாரம் என்பன இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த வருடம் ஓகஸ்ட் மாதம் எட்டப்பட்ட இணக்கத்தின் அடிப்படையில் தென்கொரியா, இந்த ஒலிபரப்பை முன்னர் இடைநிறுத்தியிருந்தது.
இரண்டு நாட்களுக்கு முன், தனது முதலாவது ஐதரசன் குண்டைச் சோதித்ததாக வடகொரியா அறிவித்துள்ள நிலையில், வடகொரியாவுக்கு எதிராக மேலும் தடைகளை விதிக்க ஐக்கிய நாடுகள் சபை இணங்கியுள்ளபோதும் எவ்வாறு வடகொரியாவைத் தண்டிப்பது தொடர்பான பொதுவான இணக்கத்துக்கு சர்வதேச சமூகம் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .