2025 டிசெம்பர் 31, புதன்கிழமை

முஸ்லிம் வெளியேற்றம்: மன்னிப்புக் கோருமாறு ட்ரம்புக்கு அழுத்தம்

Administrator   / 2016 ஜனவரி 10 , பி.ப. 12:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

குடியரசுக் கட்சியின் சார்பில் அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட எதிர்பார்த்துள்ள டொனால்ட் ட்ரம்பின் பிரசாரக் கூட்டமொன்றிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம் ஆர்ப்பாட்டக்காரரிடம் மன்னிப்புக் கோருமாறு ட்ரம்புக்கு, அமெரிக்க-இஸ்லாமிய தொடர்பாடல்களுக்கான சபை அழுத்தம் கொடுத்துள்ளது.

தெற்கு கரோலினாவில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்திலிருந்து ரோஸ் ஹமிட் வெளியேற்றப்பட்டமையானது, அமெரிக்காவிலிலுள்ள முஸ்லிம்களுக்கு அச்சுறுத்தும் செய்தியை விடுக்கின்றது என அமெரிக்க-இஸ்லாமிய தொடர்பாடல்களுக்கான சபை கூறியுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை (08), ரொக் ஹில் நகரில் இடம்பெற்ற பிரசாரக் கூட்டமொன்றில், “சலாம், நான் அமைதிக்காக வந்திருக்கிறேன்” என்ற வாசகம் அடங்கிய டீ-ஷேர்ட்டை அவர் அணிந்திருந்து, அமைதியாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தபோதே, ஹமிட் , அங்கிருந்து அகற்றப்பட்டிருந்தார். அமைதிக்கான அரபுச் சொல்லே சலாம் ஆகும்.

ஏதேனும் இடையூறு விளைந்தால், ட்ரம்ப், ட்ரம்ப் என கோஷமிடுமாறு சனத்திரளுக்கு அறிவுத்தப்பட்டிருந்த நிலையில், ஹமிட், அங்கிருந்தபோது அவர்கள் கோஷமெழுப்பியிருந்தனர்.

இதனையடுத்து, 56 வயதான விமானப் பணிப்பெண்ணான ஹமிட்டை வெளியேறுமாறு, பாதுகாப்பு அதிகாரியொருவரால் கூறப்பட்டிருந்ததோடு, அவரை நோக்கி “ஹூ” சத்தமிடப்பட்டிருந்த நிலையில், அவர் பாதுகாப்புடன் வெளியேற்றப்பட்டிருந்தார்.

அமெரிக்காவில் முஸ்லிம்கள் நுழைவதற்கு தடைவிதிக்கும் முன்மொழிவை ட்ரம்ப் முன்வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X