2026 ஜனவரி 12, திங்கட்கிழமை

தாய்லாந்தில் கண்டெடுக்கப்பட்ட சிதைவுகள் MH370க்கு உரியனவல்ல

Shanmugan Murugavel   / 2016 ஜனவரி 24 , பி.ப. 01:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

தென்பகுதி தாய்லாந்தின் கிழக்குக் கரையோரக் கண்டெடுக்கப்பட்ட சிதைவுகள், MH370 விமானத்தைச் சேர்ந்தவையாக இருப்பதற்கான வாய்ப்பு இல்லையென, விமானத்துறை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

2 மீற்றர் அகலமானதும் 3 மீற்றர் நீளமானதுமான இந்தச் சிதைவு கண்டெடுக்கப்பட்டதும், அது, MH370 விமானத்தினுடையதாக இருக்குமா என்ற எதிர்பார்ப்புக் காணப்பட்டது.
இந்து சமுத்திரத்தில் காணப்படும் பலமான ஓட்டம், விமானச் சிதைவுகளை, பல்லாயிரக்கணக்கான கிலோமீற்றர்களுக்குக் கொண்டுசெல்லக்கூடும் என்ற போதிலும், பூமியின் வட அரைக் கோளத்துக்குக் கொண்டுசெல்லப்பட வாய்ப்புகள் இல்லையெனத் தெரிவித்துள்ளனர்.

கண்டெடுக்கப்பட்ட சிதைவின் வடிவமைப்பு, அது விமானமொன்றின் சிதைவாக இருக்கவே அதிக வாய்ப்புகளைக் கொண்டிருப்பதாகத் தெரிவிக்கும் அதிகாரிகள், இது குறித்த மேலதிக தகவல்களுக்காகக் காத்திருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .