2025 டிசெம்பர் 31, புதன்கிழமை

அவுஸ்திரேலிய ஆடுகளங்களை விமர்சிக்கிறார் ஸ்மித்

Shanmugan Murugavel   / 2016 ஜனவரி 24 , பி.ப. 03:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

அவுஸ்திரேலிய அணியின் தலைவர் ஸ்டீவன் ஸ்மித், அவுஸ்திரேலிய ஆடுகளங்கள் குறித்துத் தன்னுடைய விமர்சனத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

அவுஸ்திரேலியாவின் இப்பருவகாலத்தில், டெஸ்ட் போட்டிகளும் ஒருநாள் சர்வதேசப் போட்டிகளும், தட்டையான ஆடுகளங்களைக் கொண்டனவாக அமைந்திருந்தன.
குறிப்பாக, அவுஸ்திரேலிய, இந்திய அணிகளுக்கிடையிலான தொடரின் 5 போட்டிகளில், மொத்தமாக 3,159 ஓட்டங்கள் குவிக்கப்பட்டன.

5 போட்டிகளில் 3,000க்கும் மேற்பட்ட குவிக்கப்பட்டமையை 'மிகவும் குறிப்பிடத்தக்க ஒன்று" எனக் குறிப்பிட்ட அவர், 'என்னைப் பொறுத்தவரை, எங்களது ஆடுகளங்களின் பண்பே, ஏமாற்றம் தருவதாக அமைந்தது. பிறிஸ்பேண், பேர்த் ஆடுளங்கள், வழக்கமான வேகமாக, அதிக பவுண்ஸைக் கொண்ட ஆடுகளங்களாக இருப்பதைப் பார்க்க விரும்புகிறேன். அவ்வாடுகளங்கள், மெதுவானவையாகவும் மென்மையானவையாகவும் காணப்பட்டதோடு, பந்துவீச்சாளர்களுக்குக் கடினமானவையாகவும் அமைந்தன" என்றார்.

அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபையின் அணியின் திறமை வெளிப்பாட்டு முகாமையாளர் பற் ஹொவார்ட், இவ்விடயம் குறித்து நடவடிக்கை எடுப்பதற்கு, இன்று உறுதியளித்தார்.

துடுப்புக்கும் பந்துக்குமிடையிலான சமநிலை, இவ்வாண்டில் காணப்பட்டிருக்கவில்லையெனத் தெரிவித்த அவர், சமநிலையொன்றைப் பேணுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படுமெனவும் அவர் தெரிவித்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X