Shanmugan Murugavel / 2016 ஜனவரி 26 , மு.ப. 09:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
தென்னாபிரிக்க, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் 4ஆவது போட்டியில், தென்னாபிரிக்க அணி 280 ஓட்டங்களால் அபார வெற்றிபெற்றது. எனினும், இத்தொடரை இங்கிலாந்து அணி, 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.
382 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி, 3 விக்கெட்டுகளை இழந்து 52 ஓட்டங்களுடன் 5ஆவது நாளைத் தொடங்கியது. எனினும், 82 பந்துகளை மாத்திரம் சந்தித்த அவ்வணி, 49 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து, 101 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது. அதிகபட்சமான 24 ஓட்டங்களை, ஜேம்ஸ் டெய்லர் பெற்றார்.
பந்துவீச்சில் கஜிஸ்கோ ரபடா, 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். முதல் இனிங்ஸில் 7 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய அவர், இப்போட்டியில் 13 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். தவிர, மோர்னி மோர்க்கல் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
இப்போட்டியில் தென்னாபிரிக்க அணி முதல் இனிங்ஸில் 475 ஓட்டங்களையும் இங்கிலாந்து அணி 342 ஓட்டங்களையும் பெற்றதோடு, தென்னாபிரிக்க அணி தனது 2ஆவது இனிங்ஸில், 5 விக்கெட்டுகளை இழந்து 248 ஓட்டங்களைப் பெற்று, தனது இனிங்ஸை இடைநிறுத்தியிருந்தது.
இப்போட்டியின் நாயகனாக கஜிஸ்கோ ரபடா தெரிவானதோடு, தொடரின் நாயகனாக, இங்கிலாந்தின் பென் ஸ்டோக்ஸ் தெரிவானார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .