Shanmugan Murugavel / 2016 ஜனவரி 27 , பி.ப. 01:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்களுக்கான, ஆண்டின் சிறந்த வீரருக்கான அலன் போடர் பதக்கத்தை, ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் டேவிட் வோணர் வென்றார். தலைவரான ஸ்டீவன் ஸ்மித்தை முந்தியே, இக்கௌரவத்தை அவர் பெற்றுக் கொண்டார். ஆண்டின் டெஸ்ட் வீரருக்கான விருதையும், டேவிட் வோணரே வெற்றிகொண்டார்.
சிறந்த வீராங்கனைக்கான மெலின்டா கிளார்க் விருதை, எலைஸ் பெரி வெற்றிகொண்டார். ஒருநாள் சர்வதேசப் போட்டிகளுக்கான சிறந்த வீரர் விருதை, கிளென் மக்ஸ்வெல், சிறந்த உள்ளூர் பெறுபேறுகளுக்கான விருதை அடம் வோஜஸ், சிறந்த வளர்ந்துவரும் வீரருக்கான விருதை, அலெக்ஸ் றொஸ்-உம் வென்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .