2026 பெப்ரவரி 23, திங்கட்கிழமை

80,000 அகதிகளை வெளியேற்றவுள்ள சுவீடன்

Shanmugan Murugavel   / 2016 ஜனவரி 28 , மு.ப. 08:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுவீடனை, கடந்த வருடம் (2015) வந்தடைந்த அகதிகள், புகலிடக்கோரிக்கையாளர்களில், புகலிடக்கோரிக்கை விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டோரில், 80,000 வரையானோரை வெளியேற்றும் சமிக்ஞையை சுவீடன் வெளிப்படுத்தியுள்ளது.

நாங்கள், 60,000 பேர் பற்றியே கதைத்துக் கொண்டிருக்கின்றோம், ஆனால் இவ்வெண்ணிக்கையானது, 80,000ஆக அதிகரிக்கலாம் என சுவீடனின் உள்விவகார அமைச்சர் அன்டேர்ஸ் இச்மன் தெரிவித்துள்ளார். தவிர, அகதிகளுக்கு பொறுப்பான பொலிஸாரையும் அதிகாரிகளையும் அகதிகளை வெளியேற்றும் நடவடிக்கையை ஒழுங்கமைக்குமாறு அரசாங்கம் வினவியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

வழமையாக வெளியேற்றப்படுபவர்கள், வர்த்தக விமானங்களிலேயே வெளியேற்றப்படுகின்ற நிலையில், மேற்படி பாரிய எண்ணிக்கை காரணமாக, இதற்கென சிறப்பாக அமர்த்தப்பட்ட விமானங்களில் வெளியேற்றப்படவுள்ளதாக இச்மன் மேலும் தெரிவித்துள்ளார்.

9.8 மில்லியன் குடித்தொகையைக் கொண்டுள்ள சுவீடன், தனது, குடித்தொகையின் வீதத்திற்கு அதிகமாக அகதிகளை உள்ளெடுத்த ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் ஒன்றாகும். கடந்த வருடம், 160,000க்கு மேற்பட்ட புகலிடக்கோரிக்கையாளர்களை அனுமதித்திருந்தது. எனினும் கடந்த நான்காம் திகதியிலிருந்து புகைப்பட அடையாளச் சோதனைகளை பயணிப்போருக்கு அறிமுகப்படுத்திய பின், மேற்படி எண்ணிக்கை சடுதியாக வீழ்ச்சியடைந்திருந்தது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X