2025 டிசெம்பர் 29, திங்கட்கிழமை

லீக் கிண்ண இறுதியில் லிவர்பூல் - சிற்றி

Shanmugan Murugavel   / 2016 ஜனவரி 28 , மு.ப. 01:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

லீக் கிண்ண (கப்பிற்றல் வண் கிண்ணம்) இறுதிப் போட்டிக்கு, மன்செஸ்டர் சிற்றி அணி தகுதிபெற்றுள்ளது. எவேர்ட்டன் அணிக்கெதிரான அரையிறுதிப் போட்டியில், சர்ச்சைக்குரிய விதத்தில் வெற்றிபெற்றே, அவ்வணி இறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றது.

இப்போட்டியின் 18ஆவது நிமிடத்தில், எவேர்ட்டனின் றொஸ் பார்க்லேயும், சிற்றியின் 24ஆவது நிமிடத்தில் பெர்ணான்டின்ஹோவும் கோல்களைப் பெற்றனர்.

அதன் பின்னர், 70ஆவது நிமிடத்தில், சிற்றியின் றஹீம் ஸ்டேர்லிங், பந்தைக் களத்துக்கு வெளியே கொண்டுசென்றதை, போட்டி மத்தியஸ்தர் கவனிக்க மறக்க, அந்தப் பரிமாற்றம் மூலமாக, கெவின் டி புரையுன், கோலைப் பெற்றார். பின்னர், 77ஆவது நிமிடத்தில் சேர்ஜியோ அகுவேரோ பெற்ற கோலின் மூலம், 3-1 என்ற கணக்கில், அவ்வணி பெற்றது.

இரு அணிகளுக்குமிடையிலான முதலாவது அரையிறுதியில் எவேர்ட்டன் அணி, 2-1 என்ற கணக்கில் வெற்றிபெற்றிருந்த நிலையில், ஒட்டுமொத்தமாக, 4-3 என்ற கோல் கணக்கில் மன்செஸ்டர் சிற்றி அணி வெற்றிபெற்று, இறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றுள்ளது.

தொடரின் இறுதிப் போட்டிக்கு, லிவர்பூல் அணி ஏற்கெனவே தகுதிபெற்றிருந்த நிலையில், இரு அணிகளுக்குமிடையிலான இறுதிப் போட்டி, பெப்ரவரி 28ஆம் திகதி இடம்பெறவுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X