2024 ஏப்ரல் 29, திங்கட்கிழமை

இந்தியா, ஆப்கானிஸ்தான், நியூசிலாந்து வெற்றி

Shanmugan Murugavel   / 2016 பெப்ரவரி 01 , மு.ப. 09:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

பங்களாதேஷில் இடம்பெற்றுவரும் பத்தொன்பது வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளில், நேற்று இடம்பெற்ற போட்டிகளில் இந்தியா, ஆப்கானிஸ்தான், நியூசிலாந்து ஆகிய அணிகள் வெற்றி பெற்றன.

இந்திய அணிக்கும் நேபாள அணிக்குமெதிரான போட்டியில், நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி, தாம் முதலில் களத்தடுப்பில் ஈடுபடுவதாக தீர்மானித்தது. அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய நேபாள அணி, போட்டி நடைபெற்ற 48 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 169 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில் அவ்வணி சார்பாக, சந்தீப் சுனர் 37, ரஜ்பிர் சிங் 35, ப்ரேம் டமாங் 29 ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில் இந்திய அணி சார்பாக அவேஷ் கான் 3, வாஷிங்டன் சுந்தர், மாயங் டகர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்திய அணி, 18.1 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மாத்திரமே வெற்றியிலக்கை அடைந்தது. துடுப்பாட்டத்தில் அவ்வணி சார்பாக ரிஷாப் பண்ட் 78, இஷன் கிஷான் 52 ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில் நேபாளம் சார்பாக ப்ரேம் டமாங் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

இதேவேளை, கனடா, ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையிலான போட்டியில், நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய கனடா அணி, 50 ஓவர்கள் முடிவில் சகலவிக்கெட்டுகளையும் இழந்து 147 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது. துடுப்பாட்டத்தில் அவ்வணி சார்பாக அர்ஸ்லன் கான் 38, அணித்தலைவர் அப்ராஷ் கான் 33 ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில் ஆப்கானிஸ்தான் அணி சார்பாக ஷம்ஷூர்ரஹ்மான், முஸ்லிம் முஸா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி, 24.1 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை மாத்திரமே இழந்து வெற்றியிலக்கை அடைந்தது. துடுப்பாட்டத்தில் அவ்வணி சார்பாக, டாரிக் ஸ்டனிஸ்காய் 56, இஹசனுல்லா 31 ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில் கனடா சார்பாக, மிராஜ் பட்டேல் 3, ஷிலோக் பட்டேல் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

நியூசிலாந்து, அயர்லாந்து அணிகளுக்கிடையிலான போட்டியில், நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற நியூசிலாந்து முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது. அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய அயர்லாந்து, 47.5 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 212 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில் அவ்வணி சார்பாக, ஜக் டெக்டர் 56, அடம் டென்னிஸன் 46 ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில் நியூசிலாந்து அணி சார்பாக ரசின் ரவீந்திர, ஜோஷ் பின்னி ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி, 40.1 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை மாத்திரமே இழந்து வெற்றியிலக்கை அடைந்தது. துடுப்பாட்டத்தில் அவ்வணி சார்பாக பின் அலென் 97, டேல் பிலிப்ஸ் 58 ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில் அயர்லாந்து அணி சார்பாக ரோரி அன்டேர்ஸ் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X