2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

தொழில்துறை வளையங்களினுடைய ஐந்தாண்டு பெருந்திட்டம் ஏப்ரல் மாதம் வெளிவரும்

Kogilavani   / 2016 பெப்ரவரி 02 , மு.ப. 10:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

கூட்டு அரசாங்கத்தின் கீழ், தொழில்துறைக்கு உத்வேகம் அளிக்கும் தொழில்துறை சீர்திருத்த திட்டங்களை வலுப்படுத்துவது தொடர்பில் விசேட ஆலோசனை செயலணி கைத்தொழில் மற்றும் வர்த்க அமைச்சர் ரிஷாட் பதியுதீனால் நியமிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய நாட்டினுடைய  கூட்டு அரசாங்கத்தின் முதலாவது தொழிற்துறை வர்த்தக வளையங்களினுடைய ஐந்தாண்டு பெருந்திட்டமும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த வாரம் கொழும்பு 03 இல் அமைந்துள்ள கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சில் இடம்பெற்ற தொழில்துறை வர்த்தக திட்டமிடல் அமர்வின் போதே இவ் அறிவித்தல் விடுக்கப்பட்டது.

இவ் அமர்வில் கைத்தொழில் மற்றும் வர்த்தக ராஜங்க அமைச்சர் சம்பிக்க பிரேமதாஸ, அமைச்சின்  செயலாளர் தென்னகோன், அமைச்சரின் ஆலோசகர்கள்; மற்றும் கைத்தொழில் வர்த்தக அமைச்சின் உத்தியோகபூர்வ அதிகாhரிகள் ஆகியோரும் கலந்துக்கொண்டனர்

இங்கு அமைச்சர் ரிஷாட் கருத்து தெரிவிக்கையில்,

நாட்டில் காணப்படுகின்ற தொழில்துறை வர்த்தக வளையங்களினுடைய அபிவிருத்தி மற்றும் வளர்ச்சி ஆகியவற்றை மையமாகக் கொண்டு  ஐந்தாண்டு பெருந்திட்டத்தை அமுல்படுத்துவதற்கு கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சின் கீழுள்ள அனைத்து தொழில்துறை வளையங்கள் ஆய்வுக்குட்பட்;டு மதிப்பீடு மேற்கொள்ளப்பட வேண்டும். இதற்காக கைத்தொழில் மற்றும் வர்த்தக இராஜங்க அமைச்சர் சம்பிக்க பிரேமதாஸாவின் தலைமையின் கீழ் விசேட குழுவை  நான் நியமித்துள்ளேன். இக்குழுவில் எனது அமைச்சின் செயலாளர் தென்னகோன் மற்றும் ஆலோசகர்கள் அடங்குவர். இச் செயற்பாடுகள் ரணில் விக்கிரமசிங்கவின் பொருளாதாரம் மற்றும் தொழில்துறை சீர்திருத்த முன்னெடுப்புக்களுக்கு பக்கபலமாக இருக்கும்.

ஆய்வு அடிப்படையில், ஐந்தாண்டு பெருந்திட்டத்தின் அறிக்கை ஏப்ரல் மாதம் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என இராஜங்க அமைச்சர் சம்பிக்க பிரேமதாச தலைமையிலான ஆலோசனைக் குழுவுக்கு உத்தரவு வழங்கியுள்ளேன். நாட்டின் பிரதமருக்கு தயாரிக்கப்படும் இந்ந சிறப்பு அறிக்கை அமைச்சரவைகளின் கருத்துக்களுக்கும் முன்வைக்கப்படும்.

இதேவேளை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தொழில்துறை திட்டமிடலை  முன்னோக்கி நகர்த்துவதுவதற்கு தொழில்துறை திட்டங்கள் அதிகரிக்கப்பட வேண்டும். இதற்கமைய   ஒருங்கிணைந்த தனியார் மற்றும் அரச  நிபுணர்களை ஈர்க்கும் வகையில் தொழில்துறை திட்டமிடலுக்கான ஒரு செயற்றிட்ட மாதிரி உருவாக்கப்பட வேண்டும்.

மேற்படி தொழில்துறை வர்த்தக வளையத்தின் ஐந்தாண்டு பெருந்திட்டத்தினூடாக எதிர்காலத்தில் முன்னணி பன்னாட்டு நிறுவனங்கள் ஈர்க்கப்படும் எனவும், இதன்மூலம் நாட்டு மக்களுக்கு தொழில் வாய்ப்புக்களும் ஏற்படும். இதன் ஊடாக நாட்டின் பொருளாதாரம் மற்றும் தொழில்துறை முன்னேற்றம் அடையும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .