2025 டிசெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

ஐயோவாவில் ஜனநாயகக் கட்சியில் ஹிலாரி வெற்றி

Shanmugan Murugavel   / 2016 பெப்ரவரி 02 , பி.ப. 03:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய அமெரிக்காவின் ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பாளர்களைத் தெரிவு செய்வதற்கான, கட்சிகளின் பிரதிநிதிகளிடையேயான முதலாவது வாக்கெடுப்பு, கடந்த திங்கட்கிழமை (01), ஐயோவாவில் இடம்பெற்றிருந்த நிலையில், ஜனநாயகக் கட்சியில், ஐக்கிய அமெரிக்காவின் முன்னாள் இராஜாங்க செயலாளரும் ஐக்கிய அமெரிக்காவின் முன்னாள் முதற்பெண்மணியுமான ஹிலாரி கிளின்டன் மயிரிழையில் வெற்றி பெற்றுள்ளார்.

மேற்படி ஐயோவா மாநில, ஜனநாயகக் கட்சியின் பிரதிநிகளுக்கிடையேயான வாக்கெடுப்பில் ஐக்கிய அமெரிக்காவின் முன்னாள் இராஜாங்க செயலாளரும் ஐக்கிய அமெரிக்காவின் முன்னாள் முதற்பெண்மணியுமான ஹிலாரி கிளின்டனுக்கும் நீண்ட காலமாக செனட்டராக இருந்து வரும் பேர்ணி சான்டர்ஸுக்கும் இடையே கடும்போட்டி நிலவிய நிலையிலேயே, இன்று செவ்வாய்க்கிழமை (02) காலையில், ஹிலாரி கிளின்டன், ஐயோவா மாநில கட்சிகளுக்கிடையேயான வாக்கெடுப்பில் வெற்றி பெற்றதாக ஹிலாரி கிளின்டனினது பிரச்சார அணி தெரிவித்திருந்தது. எனினும் அந்நேரத்தில், ஜனநாயகக் கட்சியின் அதிகாரிகள், வெற்றியாளரை அறிவித்திருக்கவில்லை.

இந்நிலையில், அடுத்து நியூ ஹம்ஷயர் மாநிலத்தில், கட்சி பிரதிநிகளுக்கிடையிலான வாக்கெடுப்பு இடம்பெறவுள்ள நிலையில், அங்கு இறுதியாக இடம்பெற்ற கருத்துக்கணிப்பில் ஹிலாரி கிளின்டன் 34 சதவீதமான வாக்குகளை மட்டுமே பெறுவார் என்று எதிர்வுகூறப்பட்டுள்ள நிலையில் பேர்ணி சான்டர்ஸ் 57 சதவீதமான வாக்குகளைப் பெறுவார் என்று கூறப்பட்டுள்ளது.  

ஐக்கிய அமெரிக்காவின் ஜனாதிபதித் தேர்தலில் எதிர்வரும் நவம்பர் மாதம் இடம்பெறவுள்ளதுடன், வெற்றி பெறும் வேட்பாளர், எதிர்வரும் 2017ஆம் ஆண்டு ஜனவரியில் பதவி ஏற்கவுள்ளார்.

 

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X