2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

யாசீர் ஷாவுக்கு 3 மாதத் தடை

Shanmugan Murugavel   / 2016 பெப்ரவரி 07 , பி.ப. 12:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஊக்கமருந்துப் பாவனை காரணமாக இடைக்காலத் தடை விதிக்கப்பட்டிருந்த பாகிஸ்தான் அணியின் சுழற்பந்து வீச்சாளர் யாசீர் ஷாவுக்கு, 3 மாதத் தடை விதிக்கப்படுவதாக, சர்வதேச கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

இவருக்கான தண்டனைக் காலம், டிசெம்பர் 27ஆம் திகதி ஆரம்பித்து, இவ்வாண்டு மார்ச் 27ஆம் திகதியுடன் நிறைவடையுமென அறிவிக்கப்படுகிறது. இதனால், பாகிஸ்தான் சுப்பர் லீக், ஆசியக் கிண்ணப் போட்டிகள், உலக இருபதுக்கு-20 தொடர் ஆகியவற்றில் பங்குபற்ற முடியாத நிலை அவருக்கு ஏற்பட்டுள்ளது.

தடை செய்யப்பட்ட மருந்தைப் பயன்படுத்தியமை உறுதிப்படுத்தப் -பட்டிருந்தாலும், அதிக உயர் அழுத்தம் காரணமாக, மனைவிக்காக வழங்கப்பட்டிருந்த மாத்திரையையே அவர் அருந்தினார் எனவும், வேறு ஊக்கமருந்துகளை மறைப்பதற்காக, இந்த மருந்தை அவர் அருந்தியிருக்கவில்லை என்பதை ஏற்றுக் கொள்வதாலேயுமே, அவருக்கு 3 மாதம் என்ற குறைந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

தடைக்காலத்தில், சர்வதேசப் போட்டிகளில் மாத்திரமன்றி, எந்த நாட்டுக் கிரிக்கெட் சபையாலும் அதனுடன் இணைந்த அமைப்புகளாலும் ஏற்பாடு செய்யப்படும் போட்டிகளிலும் பங்குபற்ற முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .