2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

சுயதொழில் உபகரணங்கள் வழங்கி வைப்பு

Niroshini   / 2016 பெப்ரவரி 09 , மு.ப. 08:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னாரில் உள்ள மாற்றாற்றல் கொண்டவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் வகையில், 'திரிசவிய' நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் சமூக சேவைகள் அமைச்சும் மன்னார் மாற்றாற்றல் கொண்டோர் புனர்வாழ்வுச் சங்கமும் இணைந்து நடத்திய சுயதொழில் பயிற்சியை பூர்த்தி செய்த 60 பயிற்சியாளர்களுக்கு இன்று திங்கட்கிழமை சுயதொழில் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

இந்நிகழ்வு மன்னார் மாற்றாற்றல் கொண்டோர் புனர்வாழ்வுச் சங்கத்தில் நடைபெற்றது.

கடந்த வருடம் தெரிவு செய்யப்பட்ட 60 சுய தொழிற்பயிற்சியாளர்கள் தமது சுய தொழில் பயிற்சியை பூர்த்தி செய்துள்ள நிலையில் அவர்களின் சுயதொழில் நடவடிக்கைகளை மேம்படுத்தும் வகையில் சுமார் 10 ஆயிரம் ரூபாய் பெறுமதியாக சுய தொழில் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

குறிப்பாக மெழுகுவர்த்தி தயாரித்தல், பூ நூல் தயாரித்தல், ஊதுபத்தி தயாரித்தல் போன்ற சுயதொழில் பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையிலேயே குறித்த உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

இந்நிகழ்வில், மன்னார் பிரதேசச் செயலாளர் கே.எஸ்.வசந்தகுமார்,  மன்னார் மாற்றாற்றல் கொண்டோர் புனர்வாழ்வுச் சங்கத்தின் பணிப்பாளர் அருட்சகோதரி  சோசப்பின் மேல், சமூக சேவை உத்தியோகஸ்தர் எம்.எஸ்.சந்திரபோஸ்சமூக அபிவிருத்தி உத்தியோகஸ்தர் எப்.ஜே.செரின், சிறுவர் மேம்பாட்டு உத்தியோகஸ்தர் ஜே.ஒஸ்மன் ஆகியோர் கலந்து கொண்டு சுய தொழில் உபகரணங்களை வழங்கி வைத்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .