2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

தொழில் வழிகாட்டல் செயலமர்வு

Niroshini   / 2016 பெப்ரவரி 09 , மு.ப. 11:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்

மட்டக்களப்பு, பட்டிப்பளை பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் பிரதேசத்தில் வேலையற்றிருக்கின்ற இளைஞர், யுவதிகளுக்கான தொழில் வழிகாட்டல் செயலமர்வு திங்கட்கிழமை (08) பிரதேச செயலக கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது.

பிரதேச செயலக திறன் விருத்தி, மனிதவள அபிவிருத்திப் பிரிவின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இச்செயலமர்வில், பட்டிப்பளைப் பிரதேசத்தைச் சேர்ந்த 80இற்கும்  மேற்பட்ட இளைஞர், யுவதிகள் பங்கேற்றனர்.

புதுக்குடியிருப்பு தொழில்நுட்ப கல்லூரி, மட்டக்களப்பு கனேடிய உலக பல்கலைக் கழக சேவை நிறுவனம், கொக்கட்டிச்சோலை தொழிற் பயிற்சி நிலையம் ஆகியவற்றின் வளவாளர்களினால் கற்கை நெறிகள் தொடர்பாக விளக்கமளிக்கப்பட்டது.

வேர்ள்ட் விஷன் சர்வதேச தன்னார்வத் தொண்டு நிறுவனம் இத்திட்டத்துக்கு உதவியிருந்தது.

இச் செயலமர்வின் ஆரம்ப நிகழ்வில், பட்டிப்பளை உதவிப் பிரதேச செயலாளர் ஏ. நவேஸ்வரன், பிரதேச செயலக அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், வளவாளர்கள், வேள்ட் விஸன் நிறுவன ஊழியர்கள் ஆகியோரும் இளைஞர், யுவதிகளும் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .