Shanmugan Murugavel / 2016 பெப்ரவரி 09 , பி.ப. 01:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
பார்சிலோனா அணியின் வீரர் லியனல் மெஸ்ஸிக்கு, சிறுநீரகக் கல் தொடர்பான சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இருந்த போதிலும், நாளை இடம்பெறவுள்ள கிங்ஸ் கிண்ண அரையிறுதிப் போட்டியில், வலென்சியா அணிக்கெதிராக அவர் விளையாடுவார் என, பார்சிலோனா தெரிவித்துள்ளது.
கடந்தாண்டு டிசெம்பரில் அவருக்கு ஏற்பட்ட சிறுநீரகம் தொடர்பாக பிரச்சினைகளை ஆராய்வதற்கான சோதனைகள், நேற்றும் இடம்பெற்றதோடு, நேற்று இடம்பெற்ற பயிற்சிகளிலும், மெஸ்ஸி பங்கேற்றிருக்கவில்லை. எனினும் கருத்துத் தெரிவித்த பார்சிலோனா, 'முதலணிக்கான வழக்கமான பணிகளுக்கு, புதன்கிழமையன்று மெஸ்ஸி திரும்புவார்" எனத் தெரிவித்தது.
ஆர்ஜென்டின அணியின் தலைவரான மெஸ்ஸி, கடந்தாண்டு இடம்பெற்ற கழகங்களுக்கிடையிலான சர்வதேச கால்பந்தாட்டச் சம்மேளனத்தின் உலகக் கிண்ண அரையிறுதிப் போட்டியில், சிறுநீரக நோய் காரணமாகப் பங்கேற்றிருக்கவில்லை. ஆனால், அதன் பின்னர் இடம்பெற்ற போட்டிகளில் அவர், பங்குபற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .