Gavitha / 2016 பெப்ரவரி 10 , மு.ப. 03:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
பயங்கரவாத சந்தேகநபர்களில், இதுவரையிலும் 12 பேருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது என்று நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ, நாடாளுமன்றத்தில் நேற்று தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில், வாய்மூல விடைக்கான வினாக்கள் நேரத்தின் போது, உதய பிரபத் கம்மன்பில, சட்டமா அதிபரின் ஆலோசனையின் பேரில், 2015.01.09ஆம் திகதியிலிருந்து 2015.10.31ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் பிணை வழங்கப்பட்ட பயங்கரவாத சந்தேகநபர்கள் தொடர்பில் கேள்விகளை கேட்டிருந்தார்.
கேள்விகளுக்கு பதிலளித்த அமைச்சர், பயங்கரவாத சந்தேகநபர்களில் 12பேருக்கு நீதவான் நீதிமன்றத்தின் ஊடாக பிணை வழங்கப்பட்டுள்ளது. மேல் நீதிமன்றத்தின் ஊடாக 02 குற்றவாளிகளுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.
இதேவேளை, தன்னை கொலைச்செய்வதற்கு வந்த பயங்கரவாத குற்றவாளி ஒருவருக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பொதுமன்னிப்பு அளித்துள்ளார்.
அத்துடன், ஏனைய பயங்கரவாத கைதிகளை கையாள்வதற்கு விசேட நீதிமன்றத்தின் ஊடாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .