2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

நாம் இலங்கையர் என்ற பொதுத்தன்மையை உறுதிப்படுத்த வேண்டும்

Sudharshini   / 2016 பெப்ரவரி 10 , மு.ப. 11:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம். செல்வராஜா 

'புதிய அரசியலமைப்பும் புதிய தேர்தல் முறைமையும் நாட்டிற்கும் நாட்டு மக்களுக்கும் நன்மை அளிக்கும் வகையில் மாற்றியமைக்கப்பட வேண்டும். அத்துடன், இன, மத, கட்சிப் பேதங்களுக்கப்பால்  நாம் இலங்கையர் என்ற பொது தனித்துவத்துடன் அனைத்து சமூகத்தினரும் வாழும் நிலை உறுதிப்படுத்துவதாகவும் அமைய வேண்டும்' என பேராசியரியர் உபுல் திசாநாயக்க தெரிவித்தார்.

பேராதனை பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் உபுல் திசாநாயக்கவிடம் புதிய அரசியலமைப்பு தொடர்பில் வினவிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் அவர் தெரிவிக்iயில்,

 '1978ஆம் ஆண்டு தொடக்கம் இதுவரை பல்வேறு பிரச்சினைகளை  எமது நாடும் நாட்டு மக்களும் எதிர்நோக்கியுள்ளனர். அரசியலமைப்பில் இடம்பெற்றிருந்த குறைபாடுகளே, அதற்கு  காரணமாகும்.

எனவே, தற்போது ஏற்படுத்தப்படவுள்ள புதிய அரசியலமைப்பிலும் புதிய தேர்தல் முறையிலும் தவறுகள் ஏற்பட இடமளிக்கக்கூடாது. குறைந்தபட்சம் ஐம்பது வருடங்களாவது நீடித்து இருக்கக்கூடிய வகையிலும் விடயம் சார் நிபுணத்துவமிக்கவர்களுடன் பல சுற்றுப் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு, பின்னர் புதிய முறைமை ஏற்படுத்தப்படல் வேண்டும்' என கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .