2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

நிரந்தர வீடுகளாக மாறி வரும் தற்காலிக கூடாரங்கள்

Sudharshini   / 2016 பெப்ரவரி 10 , பி.ப. 02:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம். செல்வராஜா

கடந்த 2014ஆம் ஆண்டு பண்டாரவளை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட  பகுதிகளில் மண்சரிவினால் 34 குடும்பங்கள் பாதிக்கப்பட்டிருந்தன. எனினும், இதுவரை அவர்களுக்கு நிரந்தர வீடுகள் அமைத்துக்கொடுக்கப்படவில்லை. இதனால், அம்மக்கள் பல பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து வருவதாக தெரிவிக்கின்றனர்.

லியங்காவெல, பெத்தேயராவ, பண்டாரவளை புறநகர் ஆகிய பகுதிகளில் 2014ஆம் ஆண்டு ஏற்பட்ட மண்சரில் 34 குடும்பங்கள் வரை பாதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில், அவர்களுக்கு தற்காலிகக் கூடாரங்கள் அமைத்துக்கொடுக்கப்பட்டது. 2 வருடங்கள் கடந்துள்ள நிலையிலும் அம்மக்கள் தற்காலிக கூடாரங்களிலேயே வாழ்ந்து வருகின்றனர்.

இது குறித்து பிரதேச செயலாளருக்கு அறிவித்தும், இதுவரை எவ்வித நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை என அம்மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.  இரு வருடங்களாக எத்தகைய அடிப்படை வசதிகளும் இன்றி தாம் பல்வேறு பிரச்சினைகளுக்கு மத்தியில் வாழ்ந்து வருவதாக பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்தனர்.

இது குறித்து, பண்டாரவளை பிரதேச செயலாளருடன் தொடர்புகொண்டு வினவியபோது, '34 குடும்பங்கள் பாதிக்கப்பட்டிருப்பது உண்மையே. ஆனாலும், அவர்களுக்கான வீடுகளை நிர்மாணித்துக் கொடுப்பதற்கு இதுவரை காணிகளை பெற்றுக்கொள்ள முடியாதுள்ளது. இதனாலே வீடுகள் இதுவரை அமைக்கப்படவில்லை.

பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சின் ஊடாக அண்மையிலுள்ள பெருந்தோட்டக் கம்பனியிடமிருந்து தற்போது காணிகளைப் பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. காணி கிடைத்ததும் வீடமைப்பு அதிகார சபையின் மூலம் வீடுகளை நிர்மாணித்தக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்' என்று கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .