Shanmugan Murugavel / 2016 பெப்ரவரி 10 , மு.ப. 05:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
தெற்காசியாவின் வேகமான நபர்களாக, இலங்கையைச் சேர்ந்த ஹிமாஷ இஷான், றுமேஷிகா புத்திக்க ஆகியோர் தெரிவாகியுள்ளனர். தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளின் 100 மீற்றர் ஓட்டப் போட்டியில் தங்கப் பதக்கங்களை வென்றே, இவர்களிருவரும் இப்பெருமையைப் பெற்றுள்ளனர்.
நேற்று இடம்பெற்ற ஆண்களுக்கான 100 மீற்றர் ஓட்டப் போட்டியில் அவர், 10.28 செக்கன்களில் ஓடி முடித்து, தங்கப் பதக்கம் வென்றார். இது, கடந்த ஏழு தசாப்தங்களில், இலங்கையர் ஒருவரால் பெறப்பட்ட சிறந்த பெறுபேறாகும்.
இறுதிப் போட்டிக்கு முன்னர் இடம்பெற்ற தகுதிகாண் சுற்றில், 10.26 செக்கன்களில் அவர் ஓடி முடித்த போதிலும், தொழில்நுட்பத் தவறு காரணமாக ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கவில்லை.
பெண்களுக்கான 100 மீற்றர் ஓட்டத்தில், இலங்கையின் றுமேஷிகா புத்திக, 11.71 செக்கன்களில் ஓடி முடித்து, தங்கப் பதக்கம் வென்றார்.
பதக்கங்களின் பட்டியலில் இலங்கை, இந்தியாவுக்கு அடுத்ததாக இரண்டாவது இடத்திலேயே தொடர்ந்தும் காணப்படுகிறது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .