சமிக்ஞை ஒலிக்கு செவிசாய்க்காத சி.வி
11-02-2016 12:33 AM
Comments - 0       Views - 1127

-எம்.றொசாந்த்

முதலமைச்சர் அலுவலகத்துக்கு அருகிலுள்ள பாதுகாப்பற்ற கடவையில் ரயில் வருவதற்கான சமிக்ஞை ஒலி எழுப்பப்பட்ட நிலையிலும் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் பயணித்த வாகனம் கடவையைக் கடந்து சென்ற சம்பவம், புதன்கிழமை (10) இடம்பெற்றது.

முதலமைச்சர் வாகனம் கடந்து செல்வதற்கு அங்கு கடமையிலிருந்து பொலிஸாரும் உடந்தையாக இருந்துள்ளனர். ரயில் வருகின்றதா என ரயில் பாதையைப் பார்த்து, வரவில்லையென்றவுடன் வாகனத்தை கடக்க சைகையும் காட்டினர்.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர், இந்தக் கடவைக்கு அருகிலுள்ள பிறிதொரு பாதுகாப்பற்ற கடவையில் கடக்க முற்பட்ட கார் ஒன்று விபத்துக்குள்ளாகி பொறியியலாளர் ஒருவர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது. 

"சமிக்ஞை ஒலிக்கு செவிசாய்க்காத சி.வி" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty