2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

9/11 தாக்குதல் சூத்திரதாரி குவான்டனாமோவில் அவதி

Shanmugan Murugavel   / 2016 பெப்ரவரி 11 , மு.ப. 11:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமெரிக்காவின் உலக வர்த்தக மையக் கட்டங்கள் மீது, 2001ஆம் ஆண்டு செப்டெம்பர் 11ஆம் திகதி நடாத்தப்பட்ட தாக்குதல்களின் சூத்திரதாரியொருவர், குவான்டனாமோ தடுப்பு முகாமில் அவதியுறுவதாக, சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது.

முஸ்தபா அல்-ஹவ்சவி என்ற குறித்த நபர், செப்டெம்பர் 11 தாக்குதல்களை ஏற்பாடு செய்தவர்களில் ஒருவராகக் குற்றஞ்சாட்டப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
எனினும், சித்திரவதைகளின் காரணமாக, பாரிய உடல்நலப் பிரச்சினையை அவர் எதிர்கொண்டுவருவதாக, சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது.

அமெரிக்க பாதுகாப்புத் திணைக்களத்துக்கு அனுப்பி வைத்துள்ள கடிதமொன்றிலேயே, இவ்விடயங்களை சர்வதேச மன்னிப்புச் சபை வெளியிட்டுள்ளது. அத்தோடு, அவரை முறையாகப் பராமரிக்குமாறும், அச்சபை கேட்டுள்ளது.

செப்டெம்பர் 11ஆம் திகதி இடம்பெற்ற தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு, 14 வருடங்களுக்கும் மேலாகச் சென்றுள்ள போதிலும், பல்வேறுபட்ட இராணுவ நீதிமன்ற வழக்குகளை அவ்வழக்கின் சந்தேநபர்கள் தொடர்ந்தும் எதிர்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .