2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

கிரிக்கெட்டில் சிவப்பு அட்டை

Shanmugan Murugavel   / 2016 பெப்ரவரி 11 , பி.ப. 11:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

கால்பந்தாட்டத்தில் சிவப்பு அட்டை, மஞ்சள் அட்டை போன்றன காண்பிக்கப்படுவதைப் போன்ற நடைமுறையொன்றை, கிரிக்கெட்டிலும் அறிமுகப்படுத்துவதற்கு, கிரிக்கெட் விதிகளைக் கட்டுப்படுத்தும் மெரிலிபோன் கிரிக்கெட் கழகம் (எம்.சி.சி) முடிவு செய்துள்ளது.

இந்தச் செயற்பாடுகள், பரிட்சார்த்த முறையில் அமுல்படுத்தப்படும் எனவும், ஐக்கிய இராச்சியத்திலுள்ள கிரிக்கெட் லீக்குகள், பாடசாலைகள், எம்.சி.சி பல்கலைக் கழகங்கள் ஆகியன, இந்தப் பரிட்சார்த்த முயற்சியில் பங்கேற்க அழைக்கப்பட்டுள்ளதாகவும் எம்.சி.சி அறிவித்துள்ளது.

புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள நடைமுறைகளின்படி, வீரர்கள் மைதானத்தில் நடந்துகொள்ளும் விதத்தைப் பொறுத்து, நான்கு வகையான பிரிவுகளில் அவை வரையறுக்கப்படும்.

முதல்நிலைக் குற்றம்:
1. நேரத்தை வீணடித்தல் - துடுப்பெடுத்தாடும், களத்தடுப்பில் ஈடுபடும் அணிகளுக்குப் பொருத்தம். இதற்கு, 5 ஓட்டங்கள் கழிக்கப்படும் அல்லது அந்த இனிங்ஸில், குறித்த பந்துவீச்சாளருக்குத் தடை.
2. கிரிக்கெட் மைதானத்தை, உபகரணங்களை, ஏனையவற்றை துஷ்பிரயோகம் செய்தல்.
3. நடுவரின் தீர்ப்புக்கு, செய்கை அல்லது வார்த்தைகள் மூலமாக எதிர்ப்புத் தெரிவித்தல்.
4. ஆபாசமான, அவமானப்படுத்தும் வார்த்தைப் பயன்பாடு அல்லது செய்கை.
5. அதிக ஆட்டமிழப்புக் கோரிக்கைகள்
6. ஆட்டமிழப்பின் போது நடுவரை நோக்கி ஆக்ரோஷமாகச் செல்லுதல்.
பரிந்துரைக்கப்பட்டுள்ள தண்டனை: நடுவரால் நடைமுறைப்படுத்தப்படும். முதற்தடவை எச்சரிக்கை, அதனைத் தொடர்ந்து ஒவ்வொரு தடவையும் 5 ஓட்டங்கள்.

இரண்டாம் நிலைக் குற்றம்:
1. நடுவரின் தீர்ப்புக்குப் பாரதூரமான எதிர்ப்பு.
2. வீரர்களுக்கிடையில் பொருத்தமற்ற உடற்தொடுகை.
3. வேண்டுமென்றே மற்றொரு வீரருக்குத் தடுப்பு.
4. வீரர், நடுவர், போட்டி அதிகாரி ஒருவர் மீது அல்லது அருகில் பந்தை வீசுதல்.
5. வீரர், நடுவர், மத்தியஸ்தர், அணி அதிகாரி அல்லது பார்வையாளர் மீது பாரதூரமான ஆபாசமான, அவமானப்படுத்தும் வார்த்தைகள், செய்கைகள்.
6. ஆடுகளத்துக்குச் சேதம் - 5 ஓட்டங்கள் தண்டனை.
பரிந்துரைக்கப்பட்டுள்ள தண்டனை: நடுவர்களால் முன்னெடுக்கப்படும் நடவடிக்கை. ஒவ்வொரு தடவையும் 5 ஓட்டங்கள்.

மூன்றாம் நிலைக் குற்றம்:
1. நடுவரை அல்லது மத்தியஸ்தரை அச்சுறுத்துதல்.
2. இன்னொரு வீரரை, அணி அதிகாரியை அல்லது பார்வையாளரை அச்சுறுத்துதல்.
3. இனம், மதம், நம்பிக்கை, நிறம், தேசியம், வயது, அங்கவீனம், பாலினம், பாலியல் தெரிவு அல்லது வேறேதாவொன்றை அவமானப்படுத்தும் விதமான கேலி அல்லது அவமானம்.
4. வேண்டுமென்றை 'பீமர்" வீசுதல்.
பரிந்துரைக்கப்பட்டுள்ள தண்டனைகள்: 10 ஓவர்களுக்கு அல்லது இனிங்ஸின் 20 சதவீத நேரத்துக்கு (எது குறைவானதோ, அதற்கு) வீரரை வெளியேற்றுதல்.

நான்காம் நிலைக் குற்றம்:
1. நடுவரை அல்லது மத்தியஸ்தரை அச்சுறுத்துதல்.
2. இன்னொரு வீரரை, நடுவரை, மத்தியஸ்தரை, அதிகாரியை, பார்வையாளரை உடல்ரீதியாகத் தாக்குதல்.
3. ஆடுகளத்தில் வன்முறை.
4. வீரர், நடுவர், மத்தியஸ்தர், அணி அதிகாரி அல்லது பார்வையாளர் மீது பாரதூரமான ஆபாசமான, அவமானப்படுத்தும் வார்த்தைகள், செய்கைகள்.
பரிந்துரைக்கப்பட்டுள்ள தண்டனைகள்: போட்டியின் எஞ்சிய நேரத்துக்கு வெளியேற்றப்படுவர். மேலதிகமாக, 5 ஓட்ட தண்டனை.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .