2024 மே 08, புதன்கிழமை

குளவிசுட்டான் கிராம மக்கள் - வட மாகாணசபை உறுப்பினர் சந்திப்பு

Kogilavani   / 2016 பெப்ரவரி 12 , மு.ப. 05:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

நவரத்தினம் கபில்நாத்

வவுனியா வடக்கு பிரதேச செயலகப்பிரிவுக்கு உட்பட்ட குளவிசுட்டான் கிராம மக்கள் மற்றும் வடக்கு மாகாணசபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று நேற்று மேற்படி கிராமத்தில் இடம்பெற்றது.

இதன்போது,கிராம மக்கள் தாம் கிராமத்தில் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் உறுப்பினரின் கவனத்துக்கு கொண்டு சென்றனர்.  

குளவிசுட்டான் கிராமத்தில் காட்டு யானைகள் தொல்லை, அபிவிருத்தியின்றி காணப்படும் குளங்கள், வீதிகள் மற்றும் இந்திய வீட்டுத்திட்டத்தினால் தாம் புறக்கணிக்கப்பட்டமை, தேசிய வீடமைப்பு அதிகாரசபையால் 2005 ஆம் ஆண்டு வழங்கப்பட்ட கடனை மீள்செலுத்துமாறு தாம் வலியுறுத்தப்படுதல் தொடர்பாக உறுப்பினரின் கவனத்துக்கு கொண்டு சென்றனர்.  

இதற்கு பதிலளித்த வடக்கு மாகாணசபை உறுப்பினர்,  'இவ்விடயங்களை  அபிவிருத்திக் குழுவின் கவனத்துக்கு கொண்டு செல்லவுள்ளதாகவும்   பிரதேச செயலளார் மற்றும் கிராம சேவகர்கள் இம்மக்களின் கோரிக்கைள் தொடர்பாக கவனமெடுத்து செயற்பட வேண்டும்' என்று கோரினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X