2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

நாம் செய்தது போதாது: மங்கள

Administrator   / 2016 பெப்ரவரி 12 , மு.ப. 09:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சொர்ணகுமார் சொரூபன்

60 வருடங்களில் பின்னர் தமிழில் தேசிய கீதம் இசைத்து நல்லிணக்கத்தை உருவாக்குவதற்கான பாதையை தொடங்கியுள்ளோம். மேலும், 3,300 ஏக்கருக்கும் அதிகமான காணிகளை விடுவித்துள்ளோம். நல்லாட்சி அரசாங்கம் உருவாகி குறுகிய காலத்தில் நாங்கள் செய்த நடவடிக்கைகள் போதாது. இன்னும் பலவற்றைச் செய்ய வேண்யுள்ளது என வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார்.

ஒருங்கிணைந்த நல்லிணக்கத்துக்கான வழிமுறைகளுக்கான இணையத்தளம் யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தில் வைத்து வெள்ளிக்கிழமை (12) அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்ட போது, அதில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார். அவர் அங்கு தொடர்ந்து கூறியதாவது,

'ஜெனீவா தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கு எந்த வெளிநாடுகளின் அழுத்தங்களும் இல்லை. நாட்டில் நல்லிணகத்தை ஏற்படுத்துவதற்காகவே அது நடைமுறைப்படுத்தப்படும். நாட்;டு மக்களுக்கு பொறுப்புக்கூற வேண்டியது நாங்களே.

நல்லிணக்கத்தை நாட்டில் ஏற்படுத்தி, நாட்டை நல்ல நிலைக்கு கொண்டு வரவேண்டும். இதற்காகவே நாங்கள் செயற்படுகின்றோம். நாட்டில் சுபீட்சம் மற்றும் சுதந்திரமான சூழலை கொண்டு வரவேண்டும்.
கடந்தகால தவறுகளைத் திருத்தி நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த பாடுபடவேண்டும். இதற்கு அனைவரும் ஒன்றிணைந்து வரவேண்டும்.

வெளிநாட்டு அமைப்புக்கள் மீதான தடைகளை நீக்கியுள்ளோம். குற்றஞ்சாட்டப்பட்டவர்களில் சிலர் விடுவிக்கப்பட்டுள்ளதுடன், குற்றவாளிகள் என இனங்காணப்பட்டவர்கள், சிறப்பு நீதிமன்றத்தினூடாக விசாரணைகள் நடத்தப்படும்.

வடக்கில் நீதியானது தற்போது கொண்டு வரப்பட்டுள்ளது. பாதுகாப்பு கறைகள் நீக்கப்பட்டுள்ளது. சிலர் தற்போதும் இனவாதம் பேசுகின்றனர். நாட்டில் இனிமேல் இனவாதம் தூக்குவதற்கு இடமில்லை' என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .