2025 டிசெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

நியூசிலாந்துக்கெதிராக அவுஸ்திரேலியா ஆதிக்கம்

Shanmugan Murugavel   / 2016 பெப்ரவரி 13 , மு.ப. 05:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

நியூசிலாந்துக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி, இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகின்ற நிலையில், நேற்று வெலிங்டனில் ஆரம்பமான முதலாவது டெஸ்ட் போட்டியின் இன்றைய இரண்டாவது நாள் ஆட்டமுடிவில், தமது முதலாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடி வரும் அவுஸ்திரேலிய அணி, 6 விக்கெட்டுகளை இழந்து 463 ஓட்டங்களைக் குவித்துள்ளது.

தற்போது, அடம் வொஜஸ் 176 ஓட்டங்களுடனும் பீற்றர் சிடில் 29 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளனர். முன்னதாக, உஸ்மான் கவாஜா 140 ஓட்டங்களையும் ஸ்டீவன் ஸ்மித் 71 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் நியூசிலாந்து அணி சார்பாக, டிம் சௌதி, ட்ரெண்ட் போல்ட் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளையும் மார்க் கிரேய்க், கொரே அன்டர்சன் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.

முன்னதாக, நேற்றைய நாளின்போது, நாணயச்சுழற்சியில் வென்ற அவுஸ்திரேலிய அணித்தலைவர் ஸ்டீவன் ஸ்மித்தினால் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட நியூசிலாந்து, 183 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தமை குறிப்பிடத்தக்கது. அவ்வணி சார்பாக, மார்க் கிரேய்க், ஆட்டமிழக்காமல் 41 ஓட்டங்களையும் கொரே அன்டர்சன் 38 ஓட்டங்களையும் பெற்றிருந்தனர். பந்துவீச்சில் அவுஸ்திரேலிய அணி சார்பாக, ஜோஸ் ஹேசில்வூட் 4 விக்கெட்டுகளையும் பீற்றர் சிடில், நேதன் லைன் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X