Shanmugan Murugavel / 2016 பெப்ரவரி 14 , மு.ப. 03:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
அவுஸ்திரேலிய அணியின் சகலதுறை வீரர் ஷேன் வொற்சன், பாகிஸ்தான் சுப்பர் லீக் தொடரிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். அவருக்கு ஏற்பட்டுள்ள உபாதை காரணமாகவே, இந்நிலை ஏற்பட்டுள்ளது.
இஸ்லாமபாத் யுனைட்டெட் அணி சார்பாகப் போட்டிகளில் பங்குபற்றிவந்த ஷேன் வொற்சன், கடந்த வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்ற போட்டியொன்றில் பந்துவீசிக் கொண்டிருந்த போது, காயமடைந்தார்.
அவரது அடிவயிற்றுப் பகுதியில் அவருக்கு உபாதை ஏற்பட்டுள்ளதோடு, பாகிஸ்தான் சுப்பர் லீக்கின் எஞ்சிய போட்டிகளில் அவர் பங்குபெற மாட்டார் எனவும், உடனடியாக அவுஸ்திரேலியா திரும்புவதாகவும் அறிவிக்கப்படுகிறது.
இந்தியாவில் இடம்பெறவுள்ள உலக இருபதுக்கு-20 தொடரில், அவுஸ்திரேலியாவின் முக்கிய வீரராக உள்ள ஷேன் வொற்சன், அத்தொடருக்கு இன்னமும் 5 வாரங்கள் கூட இல்லாத நிலையில் உபாதைக்குள்ளாகியுள்ளமை, அத்தொடரின் ஆரம்பப் போட்டிகளில் அவரால் பங்குபற்ற முடியுமா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.
அண்மையில் இடம்பெற்ற ஐ.பி.எல் ஏலத்தில், றோயல் சலஞ்சர்ஸ் பெங்களூர் அணி சார்பாக விளையாடுவதற்கு, ஷேன் வொற்சன் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். 9.5 கோடி இந்திய ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்யப்பட்ட வொற்சன், அவ்வேலத்தில் அதிக விலைக்கு ஒப்பந்தம் செய்யப்பட்ட வீரராக மாறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .