Shanmugan Murugavel / 2016 பெப்ரவரி 14 , மு.ப. 04:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
நியூசிலாந்து, அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டியில், அவுஸ்திரேலிய அணி, வெற்றியை நோக்கி முன்னேறி வருகிறது.
வெலிங்டனில் இடம்பெற்றுவரும் இப்போட்டியில், 6 விக்கெட்டுகளை இழந்து 463 ஓட்டங்களுடன் இன்றைய நாள் ஆட்டத்தைத் தொடர்ந்த அவுஸ்திரேலிய அணி, 562 ஓட்டங்களுக்குச் சகல விக்கெட்டுகளையும் இழந்தது. துடுப்பாட்டத்தில் அடம் வோஜஸ் 239, உஸ்மான் கவாஜா 140, ஸ்டீவன் ஸ்மித் 71, பீற்றர் சிடில் 49, பீற்றர் நெவில் 32 ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில் டிம் சௌதி, ட்ரென்ட் போல்ட், டக் பிறேஸ்வெல், கொரே அன்டர்சன், மார்க் கிறெய்க் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
379 ஓட்டங்களால் பின்னிலை வகித்த நிலையில், தனது இரண்டாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாட ஆரம்பித்த நியூசிலாந்து அணி, 4 விக்கெட்டுகளை இழந்து 178 ஓட்டங்களைப் பெற்றுள்ளது. இதன்படி, 6 விக்கெட்டுகள் கைவசமுள்ள நிலையில், 201 ஓட்டங்களால் அவ்வணி பின்னிலை வகிக்கிறது. துடுப்பாட்டத்தில் டொம் லேதம் 63, மார்ட்டின் கப்டில் 45, ஹென்றி நிக்கலஸ் ஆட்டமிழக்காமல் 31 ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில் நேதன் லையன் 2 விக்கெட்டுகளையும் ஜொஷ் ஹேஸல்வூட், மிற்சல் மார்ஷ் இருவரும் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடியிருந்த நியூசிலாந்து அணி, 183 ஓட்டங்களுக்குச் சகல விக்கெட்டுகளையும் இழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .