2026 ஜனவரி 12, திங்கட்கிழமை

ட்ரம்ப், புஷ் கடும் மோதல்

Shanmugan Murugavel   / 2016 பெப்ரவரி 14 , பி.ப. 12:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

இவ்வாண்டு இடம்பெறவுள்ள அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலுக்கான குடியரசுக் கட்சி வேட்பாளரைத் தெரிவுசெய்வதற்கான உட்கட்சிப் போட்டி இடம்பெற்றுவரும் நிலையில், அதற்கான விவாதமொன்று, நேற்று இடம்பெற்றது.

இதில், தேசியமட்டக் கருத்துக்கணிப்பில் முதலிடம் வகிக்கும் டொனால்ட் ட்ரம்பும், மற்றொரு வேட்பாளரான ஜெப் புஷ்ஷும், கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதில், முன்னாள் ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ்ஷின் மகனும், மற்றொரு முன்னாள் ஜனாதிபதியான ஜோர்ஜ் டபிள்யூ புஷ்ஷின் சகோதருமான ஜெப் புஷ் மீது, கடுமையான விமர்சனத்தை, ட்ரம்ப் முன்வைத்தார்.

'ஜோர்ஜ் புஷ், தவறொன்றைச் செய்தார். நாம் அனைவரும் தவறு செய்துள்ளோம். ஆனால், அவரது தவறு, அழகானது. அவர்கள் பொய் சொன்னார். மாபெரும் அழிவை ஏற்படுத்தக்கூடிய ஆயுதங்கள் அங்கு (ஈராக்கில்) இருப்பதாகச் சொன்னார்கள். அங்கு எவையுமே இருக்கவில்லை" எனத் தெரிவித்தார்.

'எனது குடும்பத்துக்கெதிராக அவர் தாக்குதல் நடத்துவது தொடர்பில் நான் களைப்படைந்துள்ளேன். என் மனதில் எனது தந்தை, உலகில் உயிருடன் உள்ள மிகச்சிறந்த ஆண். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை டொனால்ட் ட்ரம்ப் தயாரித்துக் கொண்டிருந்த போது, எனது சகோதரர், எங்களைப் பாதுகாப்பதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தார்" எனத் தெரிவித்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .