கொழும்பு இந்துவுக்கு சாமர சில்வா, பிரசன்ன பயிற்சி
16-02-2016 04:26 AM
Comments - 0       Views - 2500

இந்துக் கல்லூரி, கொழும்பு 04இன் கிரிக்கெட் வீரர்களுக்கு, இலங்கை தேசிய கிரிக்கெட் வீரர்களான சாமர சில்வா, பிரசன்ன ஜெயவர்தன ஆகியோர் பயிற்சியளிக்கவுள்ளனர். இந்துக் கல்லூரி, கொழும்பு 04க்கும் யாழ்ப்பாண இந்துக் கல்லூரிக்குமிடையிலான மாபெரும் கிரிக்கெட் போட்டியை முன்னிட்டே, இந்தப் பயிற்சி முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நாளை புதன்கிழமை (17) இடம்பெறவுள்ள இந்தப் பயிற்சிகள், அரை நாள் இடம்பெறத்தக்கதாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இலங்கை தேசிய அணியில் விளையாடிய அனுபவமுள்ளவர்களான இவ்விருவரும், தங்களது அனுபவங்களையும் கிரிக்கெட் நுணுக்கங்களையும் இந்துக் கல்லூரி, கொழும்பு 04இன் கிரிக்கெட் வீரர்களுக்கு வழங்குமுகமாக, இது ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதற்கு மேலதிகமாக, கிரிக்கெட் வீரர்களுக்கான விசேட உடற்தகுதிப் பயிற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்தப் பயிற்சிகளை, இலங்கை இராணுவ றக்பி அணியின் உடற்பயிற்சி நிபுணர் மேற்கொண்டு வருகிறார்.

இந்தப் பயிற்சிகளுக்கான ஏற்பாடுகளை, இந்துக் கல்லூரி, கொழும்பு 04இன் பழைய மாணவர்கள் ஏற்பாடு செய்கின்றனர்.
பொதுவாகவே, மாணவர்கள் மத்தியில் விளையாட்டுகளுக்கான ஆர்வம் குறைவடைந்துள்ள சூழ்நிலையில், விளையாட்டுகள் மீதும் விளையாட்டு வீரர்கள் மீதும் புதியதோர் ஆர்வத்தை ஏற்படுத்துமுகமாக, இவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக, அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்துக் கல்லூரி, கொழும்பு 04 அணிக்கும் யாழ்ப்பாண இந்துக் கல்லூரி அணிக்குமிடையிலான மாபெரும் கிரிக்கெட் போட்டி, எதிர்வரும் வெள்ளி, சனிக்கிழமைகளில் (19, 20), யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

"கொழும்பு இந்துவுக்கு சாமர சில்வா, பிரசன்ன பயிற்சி" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty