Shanmugan Murugavel / 2016 பெப்ரவரி 19 , மு.ப. 01:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
நியூசிலாந்து, அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் 2ஆவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டி, நாளை ஆரம்பிக்கவுள்ளது.
கிறைஸ்ட்சேர்ச்சில் இடம்பெறவுள்ள இப்போட்டி, இலங்கை நேரப்படி அதிகாலை 3 மணிக்கு ஆரம்பிக்கவுள்ளது.
இந்தப் போட்டி, நியூசிலாந்து அணியின் பிரென்டன் மக்கலத்தின் இறுதி சர்வதேசப் போட்டியாக அமையவுள்ளதால், உணர்வுகள் கலந்த போட்டியாக அமையவுள்ளது.
அத்தோடு, இந்தப் போட்டியை வென்றாலோ அல்லது வெற்றி தோல்வியின்றி முடித்துக் கொண்டாலோ, டெஸ்ட் தரப்படுத்தலில் முதலாவது இடத்தை, அவுஸ்திரேலிய அணி கைப்பற்றுமென்ற நிலையில், முக்கிய போட்டியாகவும் அமைந்துள்ளது.
முதலாவது போட்டியில் வெற்றிபெற்ற அவுஸ்திரேலிய அணியே, நாளை ஆரம்பிக்கவுள்ள போட்டியிலும் வெற்றிபெறுமென எதிர்பார்க்கப்படுகின்ற போதிலும், வேகப்பந்து வீச்சாளர்களுக்கு அதிக உதவியை வழங்கும் ஆடுகளமாக அமையுமென எதிர்பார்க்கப்படும் கிறைஸ்ட்சேர்ச் ஆடுகளம், நியூசிலாந்து பந்துவீச்சாளர்களுக்கும் உதவுமென எதிர்பார்க்கப்படுகிறது.
இப்போட்டியில், அவுஸ்திரேலியாவின் அனுபவமிக்க வேகப்பந்து வீச்சாளர் பீற்றர் சிடில், முதுகு உபாதை காரணமாகப் பங்குபற்றமாட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .