2026 ஜனவரி 03, சனிக்கிழமை

சர்ச்சைக்குரிய பொதுஜன வாக்கெடுப்பில் ஞாயிறன்று வாக்களிக்கிறது சுவிஸ்

Shanmugan Murugavel   / 2016 பெப்ரவரி 26 , மு.ப. 03:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

குற்றங்களை மேற்கொண்டதாக உறுதிப்படுத்தும் வெளிநாட்டுப் பிரஜைகளை, சுவிற்ஸர்லாந்திலிருந்து வெளியேற்றும் சர்ச்சைக்குரிய பொதுஜன வாக்கெடுப்பில், சுவிற்ஸர்லாந்துப் பிரஜைகள், ஞாயிற்றுக்கிழமையன்று (28) வாக்களிக்கவுள்ளனர்.

சுவிஸின் பெரும்பான்மைக் கட்சியான வலதுசாரிக் கொள்கைகளைக் கொண்ட சுவிஸ் மக்கள் கட்சி, சர்ச்சைக்குரிய இந்த வாக்கெடுப்புக்கான நடவடிக்கைகளை முழுமூச்சாக மேற்கொண்டிருந்தது.

இந்தச் சட்டத்துக்கு ஆதரவு கிடைத்து, அது நிறைவேற்றப்படுமாயின், சிறிய குற்றங்களைக் கூட மேற்கொள்வோர், சுவிஸிலிருந்து வெளியேற்றப்படும் ஆபத்துக் காணப்படுகிறது. அத்தோடு, வெளிநாட்டுப் பிரஜையொருவரை நாடு கடத்துவதிலிருந்து தடுக்கும் நீதிபதியொருவரின் அதிகாரத்தையும், அது பறிக்கும்.

10 வருட காலப்பகுதியில், கீழ்நிலைக் குற்றங்கள் இரண்டில் ஈடுபட்டவர்களே, இவ்வாறு வெளியேற்றப்படவுள்ளனர். மோதல், பணச்சலவை, தவறான வாக்குமூலமளித்தல், பொது இடத்தில் தவறான முறையில் வெளிப்படுத்துதல் உள்ளிட்ட பல குற்றங்கள், கீழ்நிலைக் குற்றங்களில் உள்ளடங்குகின்றன.

இந்தச் சட்டத்துக்கு, அரசாங்கத்துக்கும் நாடாளுமன்றத்துக்கும் பெரிய அரசியல் கட்சிகளிடமிருந்தும் மனித உரிமைகள் ஆர்வலர்களிடமிருந்தும், கடுமையான எதிர்ப்பு உருவாகியுள்ளது. அடிப்படை உரிமைகளை இது பாதிக்குமென, எதிர்ப்பவர்கள் தெரிவிக்கின்றனர்.

ஆனால், இதற்கு முன்னர் பொதுஜன வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்ட சட்டமூலத்தை, நாடாளுமன்றத்தில் பலமிழக்கச் செய்ததாகவும், அது, காகிதத்தால் செய்யப்பட்ட புலியே தவிர வேறேதுமில்லை எனவும், சுவிஸ் மக்கள் கட்சி தெரிவிக்கிறது. இதன் காரணமாக, இந்தச் சட்டத்துக்கு ஆதரவாக வாக்களிக்குமாறு, மக்களை அது கோருகிறது.

இதற்கு முன்னை சட்டத்தின்படி, வன்புணர்வு, ஏனைய பாரதூரமான பாலியல் குற்றங்கள், கொள்ளை, போதை மருந்துக் கடத்தல், சமூக உதவிகளைத் துஷ்பிரயோகம் செய்தல் போன்றவற்றுக்கே, நாடு கடத்தலென்பது சாத்தியமானதாகும். இது, கடந்தாண்டு மார்ச் மாதத்தில் இது நிறைவேற்றப்பட்டது.

சுவிஸ் தரவுகளின்படி, குறித்த சட்டம், மார்ச் மாதத்தை விட, 2014ஆம் ஆண்டிலிருந்தே அமுலிலிருந்திருந்தால், நாட்டிலிருந்து வெளியேற்றப்பட்ட 500 பேரை விட, 3,900 பேர் வெளியேற்றப்பட்டிருப்பர். தற்போது முன்வைக்கப்பட்டுள்ள சட்டமூலம், சட்டமாக இருந்திருந்தால், 10,200 வெளிநாட்டவர்கள் வெளியேற்றப்பட்டிருப்பர் எனச் சுட்டிக்காட்டப்படுகிறது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X