யாழில் நடைபெறும் ஜம்போறி
26-02-2016 11:00 AM
Comments - 0       Views - 149

எம்.றொசாந்த்

இலங்கை சாரணர் சங்கத்தின் ஏற்பாட்டில் வடமாகாண கல்வி அமைச்சின் அனுசரணையில் 9 ஆவது தேசிய சாரணர் ஜம்போறி, கடந்த 20 ஆம் திகதி தொடக்கம் முதல் யாழில் நடைபெற்று வருகின்றது.

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி, வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலை, முனீஸ்வரன் ஆலய வளாகம், மாநகர சபை மைதானம், கோட்டைப் பகுதி ஆகிய இடங்களில் நடைபெற்று வரும் இந்த ஜம்போறி, இன்று 26 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

இதில் இலங்கையைச் சேர்ந்த மற்றும் வெளிநாடுகளிலிருந்து சுமார் 10 ஆயிரம் சாரணர்கள் வருகை தந்துள்ளனர். 20 மற்றும் 21 ஆம் திகதிகளில் சாரணர்களால் அமைக்கப்பட்ட ஜம்போறி முகாம்களை, கடந்த 22 ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திறந்து வைத்தமை குறிப்பிடத்தக்கது.

"யாழில் நடைபெறும் ஜம்போறி" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty