மகாஜனாக் கல்லூரி வெற்றி
26-02-2016 04:57 PM
Comments - 0       Views - 164

-குணசேகரன் சுரேன்

இலங்கை பாடசாலைகள் கிரிக்கெட் சங்கத்தின் ஏற்பாட்டில் இலங்கை பாடசாலைகளில் 19 வயதுப் பிரிவு கிரிக்கெட் அணிகளுக்கிடையில் நடைபெற்ற 50 ஓவர் கிரிக்கெட் போட்டியொன்றில்  தெல்லிப்பழை மகாஜனாக் கல்லூரி அணி 9 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றது.

அலவ ஸ்ரீ ராகுல தேசிய பாடசாலை மைதானத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற இப் போட்டியில், தெல்லிப்பழை மகாஜனாக் கல்லூரியும் ஸ்ரீ ராகுல தேசிய பாடசாலை அணியும் மோதின.

நாணயச் சுழற்சியில் வென்ற மகாஜனாக் கல்லூரி அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது. அதற்கிணங்க களமிறங்கிய ஸ்ரீ ராகுல தேசிய பாடசாலை அணி, 21 ஓவர்களில் 69 ஓட்டங்களுக்குச் சகல விக்கெட்களையும் இழந்தது.
பந்துவீச்சில் மகாஜனா அணி சார்பாக சிறிவரதன் டினேஸ், கணேஸ் கனிஸ்ரன் தலா 3 விக்கெட்களையும் தங்கராசா தயுஸ்ரன் 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

70 என்ற வெற்றியிலக்குடன் பதிலுக்குத் துடுப்பாடக் களமிறங்கிய மகாஜனா அணி, 9.4 ஓவர்களில் 1 விக்கெட்டை மட்டும்; இழந்து வெற்றியிலக்கை அடைந்தது. சுந்தரலிங்கம் புருசோத் ஆட்டமிழக்காமல் 34, இராசதுரை லக்ஸ்மன் 26 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தனர்.

"மகாஜனாக் கல்லூரி வெற்றி" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty