Shanmugan Murugavel / 2016 மார்ச் 02 , மு.ப. 10:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் சபைக்கு, இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் கடுமையான அழுத்தங்கள் வழங்கப்பட்டுள்ளன. சர்வதேச கிரிக்கெட் சபையில், 2014ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட மாற்றங்கள் தொடர்பாகவே இவ்வழுத்தங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இந்தியா, இங்கிலாந்து, அவுஸ்திரேலிய ஆகியன இணைந்து, சர்வதேச கிரிக்கெட் சபையில் அதிக அதிகாரத்தைக் கைப்பற்றிய நிலையில், அதில், அப்போதை இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் சபைத் தலைவர் கைல்ஸ் கிளார்க்கின் பங்கு தொடர்பாகவே ஆராயப்படுகிறது.
இது தொடர்பில் விளக்கமளிப்பதற்கு, இவ்வாண்டு இறுதியில் நாடாளுமன்றத்துக்கு கிளார்க் அழைக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கு முன்பதாக, கிரிக்கெட் சபையிடம் 6 கேள்விகள் முன்வைக்கப்பட்டுள்ளன. சர்வதேச கிரிக்கெட் சபையின் அதிகாரமிக்க தவிசாளர் பதவிக்கு, கைல்ஸ் கிளார்க் போட்டியிடவுள்ளதாகத் தெரிவிக்கப்படும் நிலையிலேயே, அது தொடர்பான கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன. அவரை, கிரிக்கெட் சபை தனது வேட்பாளராக அனுப்புமா எனவும், மூன்று அணிகள் இணைந்து மேற்கொண்ட கைப்பற்றலில் முக்கிய பங்கு வகித்த கிளார்க்கை அப்பதவிக்குப் பிரேரிப்பது பொருத்தமானதா என்பது உள்ளிட்ட கேள்விகளே, கிரிக்கெட் சபையிடம் கேட்கப்பட்டுள்ளன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .