2026 பெப்ரவரி 26, வியாழக்கிழமை

சிட்னியில் தாக்குதல்: ஒருவர் பலி; இருவர் காயம்

Shanmugan Murugavel   / 2016 மார்ச் 07 , மு.ப. 11:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

அவுஸ்திரேலியாவின் சிட்னியில் புறநகர்ப்பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவமொன்றில், மூவர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. அதில் ஒருவர் கொல்லப்பட்டதோடு, மற்றைய இருவரும் காயமடைந்தனர். பின்னர், தாக்குதலை மேற்கொண்ட துப்பாக்கிதாரியும், தன்னைத் தானே சுட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

தொழிற்சாலையொன்றின் புகுந்த ஆயுததாரியொருவர், அங்கிருந்தவர்களை பணயக் கைதிகளாகப் பிடித்துள்ளதாக, இன்று காலை 11 மணியளவில், பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்டது. அவ்விடத்துக்குப் பொலிஸார் சென்ற போது, காயமடைந்த நிலையில் இருவரையும் உயிரிழந்த நிலையில் ஒருவரையும் கண்டுபிடித்தனர். அதிலொருவருக்குச் சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

இதில் சம்பந்தப்பட்ட மூவருமே சகோதரர்கள் எனவும், எனவே, இது பயங்கரவாதம் சம்பந்தப்பட்ட ஒன்று அல்ல எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

6 மணிநேரமாக ஆயுததாரியுடன் இடம்பெற்ற முறுகலின் முடிவில், இன்னும் மூன்று பேர் விடுவிக்கப்பட்டனர். அவர்கள் விடுவிக்கப்படும் போது, அவர்களைப் பிடித்து வைத்திருந்த ஆயுததாரியும், உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டார்.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .