2025 டிசெம்பர் 15, திங்கட்கிழமை

'ஆசியக்கிண்ண வெற்றி விசேடமானது'

Shanmugan Murugavel   / 2016 மார்ச் 07 , மு.ப. 11:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

இடம்பெற்றுவந்த ஆசியக் கிண்ணப் போட்டிகளில், போட்டிகளை நடாத்திய பங்களாதேஷ் அணியைத் தோற்கடித்து, சம்பியன் பட்டம் வென்ற இந்திய அணியின் தலைவர் மகேந்திரசிங் டோணி, அவ்வெற்றியை விசேடமானது என வர்ணித்துள்ளார்.

மழை காரணமாகப் பாதிக்கப்பட்டு இடம்பெற்ற இப்போட்டி, 15 ஓவர்கள் கொண்ட போட்டியாக அமைந்தது. முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட பங்களாதேஷ் அணி, 15 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 120 ஓட்டங்களைப் பெற்றது. மகமதுல்லா ஆட்டமிழக்காமல் 33 (18), சபீர் ரஹ்மான் ஆட்டமிழக்காமல் 32 (29) ஓட்டங்களைப் பெற்றனர்.

பதிலளித்தாடிய இந்திய அணி, 13.5 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து வெற்றியிலக்கை அடைந்தது. ஷீகர் தவான் 60 (44), விராத் கோலி ஆட்டமிழக்காமல் 41 (28), மகேந்திரசிங் டோணி ஆட்டமிழக்காமல் 20 (7) ஓட்டங்களைப் பெற்றனர்.

வெற்றி தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த டோணி, 'இது விசேடமானதொரு வெற்றி" என்றார். 'இறுதிப் போட்டியில் இந்தியா தோற்பதென்பது, இறுதிப் போட்டியொன்றில் இந்தியா வெல்வதை விடப் பெரிய தலைப்புச் செய்தி" எனத் தெரிவித்த டோணி, 'நீங்கள் வெல்வீர்களானால், 'பெரிதாக ஒன்றுமில்லை: நீங்கள் பங்களாதேஷிடம் தோற்பீர்களானால், 'நீங்கள் பங்களாதேஷிடம் தோற்றுவிட்டீர்களா?" என மக்கள் சொல்வர்" என்று தெரிவித்தார்.

பங்களாதேஷ் அணி, அண்மைக்காலமாக வெளிப்படுத்திவரும் சிறப்பான பெறுபேறுகளுக்கு மதிப்பளித்த டேணி, 2004ஆம் ஆண்டு இருந்த பங்களாதேஷ் குழாமைப் போன்றதல்ல இதுவெனவும், தற்போதைய பங்களாதேஷ் குழாம், மிகச்சிறப்பான வீரர்களைக் கொண்டது எனவும் தெரிவித்தார்.

இந்தத் தொடரில், ஆரம்ப வேகப்பந்து வீச்சாளர் ஆஷிஷ் நெஹ்ரா சிறப்பாகச் செயற்பட்டுள்ள போதிலும், மொஹமட் ஷமி, தனது முழுமையான உடற்றகுதியை அடைவாராயின், உலக இருபதுக்கு-20 தொடரின் போட்டிகளில் ஆஷிஷ் நெஹ்ராவே அணியிலிருந்து நீக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளனவென, டோணி தெரிவித்தார்.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .