Shanmugan Murugavel / 2016 மார்ச் 08 , மு.ப. 11:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
அறிவிக்கப்பட்டுள்ள தெரிவுக்குழுவில், இலங்கை அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார சேர்க்கப்பட்டமை, ஆச்சரியத்தை ஏற்படுத்தவும் தவறவில்லை.
இலங்கை அணி சார்பாக அண்மையில் வரை விளையாடிய குமார் சங்கக்கார, 7 மாதங்களுக்கு முன்னரே சர்வதேசப் போட்டிகளிலிருந்து ஓய்வுபெற்றிருந்தார். அத்தோடு, உள்ளூர்ப் போட்டிகளில் இன்னமும் தொடர்ந்து விளையாடி வருகிறார்.இந்நிலையில், இலங்கை அணியின் தேர்வாளராக அவர் நியமிக்கப்பட்டமை, புருவங்களை உயர்த்தியிருந்தது.
தனது பதவி தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த குமார் சங்கக்கார, குறுகியகாலத்துக்கான பதவி மாத்திரமே என்பதாலேயே, இப்பொறுப்பை ஏற்றுக் கொண்டதாகத் தெரிவித்தார்.
இலங்கையில் மற்றோர் அணித்தலைவரான மஹேல ஜெயவர்தனவை, துடுப்பாட்ட ஆலோசகராக இங்கிலாந்து அணி பதவிக்கு அமர்த்தியுள்ள நிலையில், குமார் சங்கக்காரவை அதேபோன்றதொரு பணிக்கமர்த்த, பாகிஸ்தான் கிரிக்கெட் சபை முயன்று வருவதாகத் தகவல்கள் வெளியாகியிருந்த நிலையிலேயே, சங்கக்காரவின் இந்நியமனம் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .