2026 ஜனவரி 03, சனிக்கிழமை

செல்சி தோல்வி

Shanmugan Murugavel   / 2016 மார்ச் 13 , பி.ப. 12:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஃப்.ஏ கிண்ண காலிறுதிப் போட்டியொன்றில் எவெர்ற்றனும் செல்சியும் மோதிய நிலையில், இப்போட்டியில் வெற்றி பெற்ற எவெர்ற்றன், எஃப்.ஏ கிண்ண அரையிறுதிப் போட்டிக்குள் சென்றுள்ளது.

இப்போட்டியில், 2-0 என்ற கோல்கணக்கில் செல்சியை எவெர்ற்றன் தோற்கடித்திருந்தது. இப்போட்டியில் பெறப்பட்ட இரண்டு கோல்களையும் செல்சியின் முன்னாள் வீரரான ரொமேலு லூகாகு என்பவரே பெற்றிருந்தார்.

இப்போட்டி முடிவினைக் காட்டிலும் இப்போட்டியின் கவனத்தை சர்ச்சைக்குரிய வீரரான செல்சியின் டியகோ கோஸ்டாவே கவனத்தை ஈர்த்திருந்தார்.

போட்டியின் 84ஆவது நிமிடத்தில் எவெர்ற்றனின் கரித் பரியுடன் முரண்பட்டுக் கொண்டமைக்காக மஞ்சள் அட்டை காட்டப்பட்டது. அவ் மஞ்சள் அட்டை, போட்டியின் இரண்டாவது மஞ்சள் அட்டையாக அமைந்ததால் சிவப்பு அட்டை காட்டப் பெற்று மைதானத்திலிருந்து வெளியேற்றப்பட்டிருந்தார்.

இந்நிலையில், மேற்படிச் சம்பவத்தின்போது கரித் பரியின் கழுத்தை நோக்கிச் சென்று தொடுகையைக் கொண்டிருந்ததாக காணொளிகளில் தெரிந்திருந்தபோதும் தான் கடிக்கவில்லையென கோஸ்டா தெரிவித்துள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X