Shanmugan Murugavel / 2016 மார்ச் 20 , பி.ப. 05:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
செல்சி அணியின் முன்னாள் முகாமையாளர் ஜொஸ் மொரின்ஹோ, மன்செஸ்டர் யுனைட்டெட் கழகத்துடன் ஒப்பந்தத்துக்கு முன்னரான உடன்பாடொன்றில் கைச்சாத்திட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவ்வாண்டு ஜூன் மாதத்துக்கு முன்னர், அக்கழகத்தின் முகாமையாளராக மொரின்ஹோ நியமிக்கப்படாதுவிடின், அவருக்கு 15 மில்லியன் ஸ்டேர்லிங் பவுண்ட்ஸ்கள் வழங்கப்பட வேண்டுமெனவும் அறிவிக்கப்படுகிறது.
கடந்தாண்டு டிசெம்பரில், செல்சி அணியின் முகாமையாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட மொரின்ஹோ, அதன் பின்னர், மன்செஸ்டர் யுனைட்டெட் அணியுடன் இணைந்து கொள்வார் எனத் தகவல்கள் தெரிவித்த போதிலும், உறுதியான தகவல்கள் வெளியிடப்படவில்லை.
இந்நிலையிலேயே, ஸ்பானிய பத்திரிகையொன்று வெளியிட்டுள்ள செய்தியிலேயே, உடன்பாடு குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது. இவ்வாண்டு மே முதலாம் திகதிக்கு முன்னர், யுனைட்டெட்டின் முகாமையாளரான மொரின்ஹோ நியமிக்கப்படாவிடின், அவருக்கு 5 மில்லியன் ஸ்டேர்லிங் பவுண்ட்ஸ்கள் வழங்கப்பட வேண்டும் எனவும் ஜூன் முதலாம் திகதிக்கு முன்னர் நியமிக்கப்படாவிடின், இன்னொரு 10 மில்லியன் ஸ்டேர்லிங் பவுண்ட்ஸ்களை அக்கழகம் வழங்க வேண்டுமென அறிவிக்கப்படுகிறது. இது தொடர்பாக, உத்தியோகபூர்வ அறிவிப்பெதுவும் இதுவரை வெளியிடப்பட்டிருக்கவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .