2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

கழிவறையில் பிரசவம்: புதருக்குள் தூக்கியெறியப்பட்ட சிசு

Gavitha   / 2016 மார்ச் 29 , மு.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

இப்போதெல்லாம் கல்லைத்தூக்கி எறிவது போன்று பெற்ற குழந்தைகளையும் தூக்கி எறிந்து விடுகின்றனர். அட வளர்க்க முடியாது என்றால், ஏங்க பெத்துக்கனும்...

இப்படித்தான், கரப்பந்து வீராங்கனை ஒருவர் கரப்பந்து விளையாடிக்கொண்டிருக்கும் போது தனது சிசுவை பிரசவித்து விட்டு புதரில் வீசிவிட்டு போயுள்ளார்.

இந்த சம்பவம் சீனாவில் ஷெஜியாங் மாகாணத்தில் இடம்பெற்றுள்ளது.

குறித்த மாகாணத்திலுள்ள சாங்ஸிங் நகரில் பெண்களுக்கான தேசிய கரப்பந்து  சாம்பியன் ஷிப் போட்டி நடைபெற்றது. இதில், 18 வயது வீராங்கனை ஒருவர், தான் நிறைமாதக் கர்ப்பிணி என்பதை மற்றவர்களுக்கு மறைத்து விளையாடிக் கொண்டிருந்துள்ளார்.

போட்டியில் விளையாடிக் கொண்டிருந்தபோது, திடீரென அந்த வீராங்கனைக்கு பிரசவ வலி ஏற்பட்டது. உடனடியாக மைதானத்தில் இருந்து வெளியேறிய அவர், கழிப்பறை சென்று சிசுவைப் பிரசவித்துள்ளார். பின்னர் யாருக்கும் தெரியாமல், அந்தச் சிசுவை அருகில் இருந்த புதரில் வீசிவிட்டு, மீண்டும் மைதானத்துக்குச் சென்று கரப்பந்து போட்டியைத் தொடர்ந்துள்ளார்.

இதற்கிடையே அந்த வழியாக சென்ற ஒருவர், அந்த சிசுவை காப்பாற்றியுள்ளார்.  குழந்தை புதருக்குள் இருந்த இடத்திலிருந்து இரத்தம் படிந்த கால்தடம் மைதானத்தை நோக்கிச் சென்றதை அவதானித்த அவர்,  இது தொடர்பில் அங்கு நின்றிருந்த பொலிஸாருக்கு தெரியப்படுத்தியுள்ளார்.

இதன் பின்னரே வீராங்கனையின் செயல் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. பிறந்த சிசுவை புதருக்குள் வீசிச் சென்ற வீராங்கனையின் செயலால், போட்டியைப் பார்க்க வந்திருந்தவர்கள் அதிர்ச்சி ஆடிப்போய்விட்டனராம்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .