2026 பெப்ரவரி 19, வியாழக்கிழமை

'பெண்கள் ஐ.பி.எல் அற்புதமாக இருக்கும்'

Shanmugan Murugavel   / 2016 ஏப்ரல் 03 , மு.ப. 07:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

பெண்களுக்கான இந்தியன் பிறீமியர் லீக் (ஐ.பி.எல்) தொடரொன்று ஏற்பாடு செய்யப்படுதல் அற்புதமாக அமையுமென, அவுஸ்திரேலிய பெண்கள் அணித்தலைவி மெக் லனிங் தெரிவித்துள்ளார். இது, பாரிய மாற்றமாக அமையுமெனவும் அவர் தெரிவித்தார்.

பெண்களுக்கான பிக் பாஷ் லீக் தொடர் அண்மையில் இடம்பெற்றிருந்த நிலையில், அதிக வரவேற்பைப் பெற்றிருந்தது. அத்தொடரில், மெல்பேண் ஸ்டார்ஸ் அணித்தலைவியாகச் செயற்பட்ட மெக் லனிங், அத்தொடரின் வெற்றி, கிரிக்கெட்டுக்கு மிகச்சிறப்பானதாக அமைந்ததாகத் தெரிவித்தார். அதேபோல், பெண்கள் சுப்பர் லீக் என்ற பெயரில், தனியான தொடரொன்றை இங்கிலாந்து கிரிக்கெட் சபை ஏற்பாடு செய்யவுள்ளது.

இந்நிலையில் கருத்துத் தெரிவித்த லனிங், 'பெண்களுக்கான பிக் பாஷ் லீக், அவுஸ்திரேலியாவில் சிறந்த வெற்றியைப் பெற்றமையை நாம் கண்டோம். இங்கிலாந்தில் சுப்பர் லீக் தொடரும் உண்டு. இங்கு பெண்களுக்கான ஐ.பி.எல் தொடரொன்று ஏற்பாடு செய்யப்பட்டால், அது விளையாட்டை முன்னோக்கிக் கொண்டு செல்லுமென்பதோடு, அதில் ஈடுபடுவதற்கு, வீராங்கனைகள் விரும்புவர்" எனத் தெரிவித்தார்.

இது தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த இங்கிலாந்து பெண்கள் அணித்தலைவி சார்ளட் எட்வேர்ட்ஸ், பெண்களுக்கான ஐ.பி.எல் தொடர் இடம்பெறுவதை எதிர்பார்ப்பதாகவும், அதேபோல் சுப்பர் லீக் தொடரிலும் பெண்களுக்கான பிக் பாஷ் லீக்கிலும் இந்திய வீராங்கனைகள் பங்குபெறுவதை எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .