Menaka Mookandi / 2016 ஏப்ரல் 04 , மு.ப. 09:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுப்பிரமணியம் பாஸ்கரன்
கிளிநொச்சி, பூநகரி கறுக்காய்தீவைச் சேர்ந்த பெண்ணொருவர் அதிக வெப்பம் காரணமாக உயிரிழந்துள்ளதாக கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேயிடத்தைச் சேர்ந்த இராஜேஸ்வரன் செந்தமிழ்செல்வி (வயது 43) என்பரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மயக்கமடைந்த நிலையில் பூநகரி வைத்தியசாலையில் கடந்த சனிக்கிழமை (02) அனுமதிக்;கப்பட்ட பெண், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலை வைத்தியதிகாரி என்.சிவரூபன் பிரேத பரிசோதனைகளை மேற்கொண்டார். உடலில் நீர்த்தன்மை குறைந்தமையால் இந்தப் பெண் உயிரிழந்ததாக வைத்திய அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .