2026 மார்ச் 16, திங்கட்கிழமை

உவராபத்தில் வன்னேரிக்குளம்

Menaka Mookandi   / 2016 ஏப்ரல் 04 , மு.ப. 10:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

கிளிநொச்சி, வன்னேரிக்குளம் கிராமம் உவராபத்தை எதிர்நோக்குவதாகவும் அதிலிருந்து தப்புவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு வன்னேரிக்குளம் கிராம அபிவிருத்திச் சங்கம் கிளிநொச்சி மாவட்டச் செயலாளர் சுந்தரம் அருமைநாயகத்திடம் கோரிக்கை முன்வைத்துள்ளது.

1953ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட வன்னேரிக்குளம் கிராமத்தில் தற்போது சுமார் 500 குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன. அனைத்து குடும்பங்களும் விவசாயத்தை முதன்மையான தொழிலாகக் கொண்டுள்ளனர். இக்கிராமத்தில் தற்போது உவர்பரம்பல் பெரும் ஆபத்தாக மாறியுள்ளது.

வன்னேரிக்குளத்தின் ஒருபகுதியான குஞ்சுக்குளம் கிராமத்தில் 450 ஏக்கர் வயல்நிலம் உவரடைந்ததன் காரணமாக அங்கு வசித்த 40 குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளன. வன்னேரிக்குளத்தில் சில வயல் நிலங்களும் உவர் நிலங்களாக மாற்றமடைந்து வருகின்றன. இதனை காப்பாற்ற வழியேற்படுத்துமாறு கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X