2026 மார்ச் 18, புதன்கிழமை

ஒருங்கிணைந்த பண்ணை திறந்து வைப்பு

Thipaan   / 2016 ஏப்ரல் 09 , மு.ப. 06:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம்.நூர்தீன், எஸ்.பாக்கியநாதன், வடிவேல் சக்திவேல்

மட்டக்களப்பு மண்டூர் பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த பண்ணை, எதிர்க்கட்சி தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனினால், இன்று சனிக்கிழமை (09) திறந்து வைக்கப்பட்டது.

கிழக்கு மாகாண விவசாய அமைச்சினால் சுமார் ஐந்து மில்லியன் ரூபாய் செலவில் புனரமைக்கப்பட்டுள்ள இந்தப் பண்ணையைத் திறந்து வைக்கும் வைபவத்தில் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நசீர் அகமட், கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கே.துரைராஜசிங்கம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அத்துடன், கிழக்கு மாகாண கல்வியமைச்சர் எஸ். தண்டாயுதபாணி மற்றும் மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஞா.ஸ்ரீநசன், சி.யோகேஸ்வரன், எஸ்.வியாழேந்திரன் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் உட்பட கிழக்கு மாகாண சபை பிரதி தவிசாளர் மற்றும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் கிழக்கு மாகாண விவசாய அமைச்சின் அதிகாரிகள் மற்றும் கால் நடை வைத்திய அதிகாரிகள் மட்டக்களப்பு மாவட்ட முக்கியஸ்தர்கள் பிரமுகர்கள் அதிகாரிகள் என பலரும் கொண்டனர்.

மட்டக்களப்பு மண்டூர், ஒல்லிமடு வீதியில் புனரமைக்கப்பட்டுள்ள இந்த பண்ணையில், கோழிப்பண்ணை மற்றும் மாட்டுப்பண்ணை ஆட்டுப்பண்ணை என்பனவும் இதன் போது திறந்து வைக்கப்பட்டன.

இந்த வைபவத்தில், உள்ளீடுகள் மற்றும் கோழிக்குஞ்சுகள் என்பவைகளும் பயனாளிகளுக்கு வழங்கி வைக்கப்பட்டன.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X