2026 மார்ச் 16, திங்கட்கிழமை

குளங்கள் புனரமைப்பில் மோசடி: விசாரணை முடிந்தும் அறிக்கை இல்லை

George   / 2016 ஏப்ரல் 18 , பி.ப. 03:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சண்முகம் தவசீலன்

'குளங்களின் தரமற்ற புனரமைப்பில் பல மில்லியன் ரூபாய் வீணடித்த முறைகேடுகள் தொடர்பில் விசாரணைகள் முடிந்த நிலையிலும் அதன் அறிக்கை இன்னும் வெளியிடப்படவில்லை'  என வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.

'தண்ணிமுறிப்பு மற்றும் உடையார்கட்டுக்குளங்கள் மீள்குடியேற்றத்தின் பின் புனரமைக்கப்பட்டது. இப்புனரமைப்புக்களில் தரமற்ற வேலைகளும், முறைகேடுகளும் இடம் பெற்றுள்ளதாக அங்குள்ள விவசாய அமைப்புக்கள் மற்றும் பொது மக்களால் முறைப்பாடுகள் செய்யப்பட்டன.

இதன்பின் குறித்த இரண்டு குளங்களின் புனரமைப்பு வேலைகள் பற்றி நான் நேரடியாக சென்று மக்களுடன் பார்வையிட்டு குறைகளை உறுதிப்படுத்தினேன்.

பின்னர், இது விடயத்தை மாகாணசபையின் 25ஆவது அமர்வில் கொண்டு வந்து அத்தீர்மானம் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதனடிப்படையில் பிரதம செயலாளரால் ஒரு குழு அமைக்கப்பட்டு விசாரணைகளும் இடம்பெற்றன. 

கடந்த ஜனவரியில் அறிக்கை கிடைக்கும் என தெரிவிக்கப்பட்ட நிலையிலும் அக்குழுவிடம் இருந்து குறித்த அறிக்கை கிடைக்காததால் விசாரணை அறிக்கையை விரைவாக தரும்படி பிரதம செயலாளர், குழுவிடம் கேட்டுக்கொண்டதை கடந்த 2016.03.16 இல் ஊடகங்களின் மூலம் அறிந்து கொண்டேன். 

இருந்தும் இன்று வரை இதற்கான அறிக்கை வெளியிடப்படவில்லை. இத்தாமதம் மேலும் பல சந்தேகங்களை ஏற்படுத்துகின்றது. இவ்விடயத்தில் மேலும் தாமதமாக்கினால் மாகாணசபையில் திரும்பவும் கேள்வி எழுப்ப வேண்டிய நிலை ஏற்படும்' என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X