Kanagaraj / 2016 ஏப்ரல் 21 , மு.ப. 08:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
தாதியொருவருக்கு தனது மர்ம உறுப்பை காட்டி சுமார் 55 வயது மதிக்கத்தக்க ஒருவரை, கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பண்டாரகம ரைகம பிரதேசத்தைச் சேர்ந்த முச்சக்கரவண்டி சாரதியே, தனது வீட்டுக்கு அருகில் வசிக்கும் தாதிக்கு, இவ்வாறு காண்பித்துள்ளார்.
சாரதி, தனது வீட்டுக்கு முன்பாக முச்சக்கரவண்டியை நிறுத்திவைத்துவிட்டு, கடும் சத்தத்துடன் ஒவ்வொருநாளும் பாடலை ஒலிபரப்பி விடுவராம்.
இதுதொடர்பில், வீட்டுக்கு அருகில் இருக்கும் தாதி, பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். அந்த முறைப்பாட்டையடுத்தே சாரதி, இவ்வாறான தேவையில்லாத செயற்பாட்டை செய்துள்ளார் என்று பொலிஸ் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .