2026 மார்ச் 14, சனிக்கிழமை

பிரித்தானிய எம்.பி விரைவில் வருவார்

Kogilavani   / 2016 ஏப்ரல் 22 , மு.ப. 04:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவின் தலைவரான ரணில் ஜயவர்தன, இலங்கைக்கு விரைவில் விஜயம் செய்யவிருப்பதாக அறிவித்துள்ளார்.

பிரித்தானியாவுக்கு விஜயம் செய்துள்ள ஆரம்பக் கைத்தொழில் அமைச்சர் தயா கமகே மற்றும் பெற்றோலிய வளத்துறை பிரதியமைச்சர் அனோமா கமகே ஆகியோர், அவரைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர். இந்தக் கலந்துரையாடலின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இலங்கையில் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காகத் தானும் தன்னுடைய கட்சியும் முடிந்த சகல உதவிகளையும் பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் ரணில் ஜயவர்தன மேலும் தெரிவித்துள்ளார்.

தேயிலை முதல் ரயில் வரையிலும், இறப்பர் முதல் நெடுஞ்சாலைகள் வரையிலுமான சகல பிரிவுகளிலும் தலையிட்டு, அத்துறைகளை மேம்படுத்துவதற்கும் இலங்கையில் தயாரிக்கும் மற்றும் உற்பத்தி செய்யப்படும் பொருட்களுக்கு சர்வதேச சந்தைகளில் உரிய இடங்களைப் பெற்றுக்கொடுப்பதற்கும் உரிய நடவடிக்கைகளை எடுப்பேன் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X