2026 மார்ச் 14, சனிக்கிழமை

பட்டிமன்றம்

Kogilavani   / 2016 ஏப்ரல் 22 , மு.ப. 07:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

'தமிழ்ச் சமூகம் இழந்ததை எண்ணிவருந்தாமல் பெற வேண்டியவைகளுக்காக தனது பயணத்தை மேற்கொள்ள வேண்டும். இந்த உலகில் நாம் எவருக்கும் சளைத்தவர்கள் அல்லர். எங்கள் பூமியை வெற்றி பூமியாக உருவாக்க வேண்டும். நேற்று நடந்ததை விட்டு நாளை நடப்பதற்காக வாழ எங்கள் சமூகம் பழகிக்கொள்ள வேண்டும்' என இந்தியா தமிழகத்தின் பட்டிமன்றப் பேச்சாளர் ராஜா தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்துக்கான இந்தியத் துணைத்தூதரகம், வடக்கு மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை அமைச்சின் ஆதரவுடன் புத்தாண்டு பிறப்பையொட்டியும் சுதந்திர பி.ஆர்.அம்பேத்காரின் 125 ஆவது பிறந்ததினத்தையொட்டியும் ஏற்பாடு செய்த பிரமாண்டமான பட்டிமன்றம் அண்மையில் யாழ்ப்பாணம், நல்லூரி சங்கிலியன் பூங்காவில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை கூறினார்.

சன் தொலைக்காட்சி புகழ் பட்டிமன்ற ராஜா மற்றும் பாரதி பாஸ்கர் ஆகியோர் இப்பட்டிமன்றத்தில் நடுவர்களாக கலந்துகொண்டனர்.
'மகிழ்ச்சிகரமான வாழ்கைக்கு அவசியமானவை தொன்று தொட்டு வரும் பழைமைகளா? அல்லது மாறிவரும் புதுமைகளா?' என்ற தலைப்பில் இடம்பெற்ற இப்பட்டிமன்றத்தில் பழைமைகளே என்ற அணியில் யப்பான் கக்சுயின் பல்கலைக்கழக முன்னாள் ஆய்வுப் பேராசிரியர் முனைவர் மனோன்மணி சண்முகதாஸ், கோப்பாய் ஆசிரிய கலாசாலை பிரதி முதல்வர் செந்தமிழ்சொல்லருவி ச.லலீசன், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவபீடப் பதிவாளர் இ.சர்வேஸ்வரா ஆகியோர் வாதிட்டனர்.

புதுமைகளே என்ற அணியில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவக் கற்கைகள் வணிகபீடப் பீடாதிபதியும் யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கத் தலைவருமாகிய பேராசிரியர் தி.வேல்நம்பி, திருநெல்வேலி பரமேஸ்வக் கல்லூரி அதிபரும் யாழ்.பத்திரிகையொன்றின் ஆசிரியருமாக ந.விஜயசுந்தரம், வேம்படி மகளிர் கல்லூரி மாணவி ப.கதிர்தர்சினி ஆகியோரும் வாதிட்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X