Niroshini / 2016 ஏப்ரல் 25 , மு.ப. 03:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுப்பிரமணியம் பாஸ்கரன்
காணாமல் போனோர் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் அமர்வு, கிளிநொச்சி மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று திங்கட்கிழமை (25) காலை ஆரம்பமாகியுள்ளது.
ஆணைக்குழுவின் தலைவர் மக்ஸ்வெல் பரணகம தலைமையில் ஆரம்பமாகியுள்ள இந்த அமர்வானது, எதிர்வரும் 28ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
அனைத்து அமர்வுகளும் மாவட்டச் செயலகத்தில் நடைபெறவுள்ளன.
இன்றைய அமர்வில் கரைச்சிப் பிரதேச செயலாளர் பிரிவைச் சேர்ந்த 360 பேர் சாட்சியமளிக்க அழைக்கப்பட்டுள்ளனர்.
நாளை செவ்வாய்க்கிழமை (26) கரைச்சிப் பிரதேச செயலாளர் பிரிவைச் சேர்ந்த 362 பேரும் 27ஆம் திகதி புதன்கிழமை கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவைச் சேர்ந்த 250 பேரும் 28ஆம் திகதி வியாழக்கிழமை பூநகரி மற்றும் பச்சிலைப்பள்ளி (பளை) ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளைச் சேர்ந்;த 194 பேரும் சாட்சியமளிக்கவுள்ளனர்.
மொத்தமாக 1,166 பேர் சாட்சியமளிக்க அழைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .