Thipaan / 2016 ஏப்ரல் 25 , மு.ப. 04:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
புனர்வாழ்வு பெற்று விடுதலையாகிய, தமிழீழ விடுதலைப் புலிகளின் அம்பாறை மாவட்ட முன்னாள் தளபதியான ராம் என்பவர், பயங்கரவாதப் புலனாய்வுப்பிரிவினரால் தடுத்துவைக்கப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தனது கணவன், திருக்கோவில் - தம்பிலுவில் பிரதேசத்திலுள்ள தமது வீட்டிலிருந்து, இனந்தெரியாதோரினால் நேற்று ஞாயிற்றுக்கிழமை (24) கடத்தப்பட்டுள்ளதாக அவரது மனைவி, திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.
இந்நிலையிலேயே பொலிஸாரினால் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .